ரூ.1.12 கோடி விலையில் டுகாட்டி பைக் வாங்கிய முதல் இந்தியர்..!

0

உலகளவில் 500 பைக்குகள் மட்டுமே தயாரிக்க உள்ள டுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா ரூ. 1.12 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த பைக் தற்போது விவேக் ஒப்ராய் எனும் இந்தியர் வாங்கியுள்ளார்.

டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா

உலகின் சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா பைக்கினை கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த டுகாட்டி நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது முதல் பைக்கினை விற்பனை செய்துள்ளது.

Google News

Ducati Superleggera 1299 indian

சூப்பர் பைக் ஆர்வலரான விவேக் ஒப்ராய் என்பவர் தனது காரேஜில் புதிதாக டுகாட்டி வரிசை பைக்குகளில் விலை உயர்ந்த கார்பன் ஃபைபர் பாடியால் கட்டமைக்கப்பட்ட இலகு எடை மற்றும் 215bhp பவரை வெளிப்படுத்தும் பைக்கை வாங்கியுள்ளார். இந்த பைக்கின் சிறப்பம்சங்களை காணலாம். 500 பைக்குகளில் தற்போது இவர் வாங்கியுள்ள பைக்கின் எண் 209 ஆகும்.

டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா சிறப்பம்சங்கள்

கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியம் அலாய் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மிக இலகுவான  150 கிலோ எடை கொண்ட பனிகேல் 1299 சூப்பர்லெக்ரா பைக்கில் மிகவும் சக்திவாய்ந்த 215 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1285cc சூப்பர்குவாட்ரோ எஞ்சினை பெற்றுள்ளது. மேலும் ரேசிங் கிட் உதவியுடன் 5 ஹெச்பி வரை ஆற்றலை அதிகரித்து 220 ஹெச்பி வரை ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இதன் டார்க் 147 நியூட்டன் மீட்டர் ஆகும்

Ducati Superleggera 1299 superbike

டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா பைக்கில் இடம்பெற்றுள்ள நவீன 1299’s six-axis IMU வாயிலாக வேகமான செயல்பாட்டினை சிறப்பாக வழங்கும் வகையில் உதவி புரியும். DTC EVO  (Ducati Traction Control ) எனப்படும் டிராக்ஷன் கன்ட்ரோல் உதவியுடன் IMU ( Inertial Measurement Unit) செயல்பட்டு பைக்கின் சக்கரங்களின் செயல்பாடு மற்றும் எஞ்சின் ஆற்றல் உற்பத்தி போன்றவற்றை கையாளும் வகையில் அமைந்துள்ளது.  இதில் டுகாட்டி ஸ்லைட் கன்ட்ரோல் , பவர் லேன்ச்,  எஞ்சின் பிரேக் கன்ட்ரோல் என பல நவீன வசதிகளை பெற்ற மோட்டார்சைக்கிள் மாடலாகும்.

500 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா விலை இந்தியாவில் ரூ.1.12,20,000 (1.12 கோடி) (எக்ஸ்-ஷோரூம் டெல்லி ) ஆகும்.