Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் கிளைம்பர் கார் உள்பட டஸ்ட்டர் மற்றும் லாட்ஜி ஸ்டெப்வே போன்ற மாடல்களின் விலை ரூ.5,200 முதல் ரூ. 1.04,000 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.  ரெனோ கார்கள் விலை குறைப்பு ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் கிளைம்பர் ஏஎம்டி, டஸ்ட்டர் எஸ்யூவி மற்றும் லாட்ஜி ஸ்டெப்வே போன்ற மாடல்களுக்கு மட்டுமே விலை குறைப்பை ரெனோ வெளியிட்டுள்ளது. குறிப்பாக க்விட் கிளைம்பர் ஏஎம்டி மாடலுக்கு ரூ. 5,200 முதல் ரூ. 29,500 வரை குறைக்கப்பட்டுள்ளது. பிரசத்தி பெற்ற ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி மாடலுக்கு ரூ.30,400 முதல் அதிகபட்சமாக ரூ.1.04,000 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. எம்பிவி ரக மாடல்களில் ஒன்றான லாட்ஜி மற்றும் லாட்ஜி ஸ்டெப்வே போன்ற மாடல்களில் ஸ்டெப்வே வேரியண்டுகளுக்கு மட்டுமே ரூ.25,700 முதல் அதிகபட்சமாக ரூ.88,600 வரை விலை குறைந்துள்ளது. ஹைபிரிட் கார்களை தவிர மற்ற அனைத்து கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் விலை கனிசமாகவே குறைந்துள்ளது. ஜிஎஸ்டிக்கு…

Read More

ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு பிறகு பல்வேறு கார் நிறுவனங்கள் மாபெரும் விலை குறைப்பை வழங்கி வரும் நிலையில் டாடா நிறுவனம் ரூ. 3300 முதல் ரூ. 2.17 லட்சம் வரை தங்களுடைய கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் விலையை குறைத்துள்ளது. டாடா கார் விலை ஜிஎஸ்டிக்கு பிறகு ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு பிறகு கார் மற்றும் மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் விலை குறைப்பை மேற்கொண்டு வரும் நிலையில் நமது நாட்டின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவு மாடல்களுக்கு  ரூ. 3300 முதல் ரூ. 2.17 லட்சம் வரை விலையை குறைத்துள்ளது. டாடா நிறுவனத்தின் சஃபாரி மற்றும் ஹக்ஸா போன்ற மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 2.17 லட்சம் வரை விலையை குறைத்துள்ள டாடா நிறுவனம் தங்களுடைய டியாகோ மற்றும் டீகோர் போன்ற மாடல்களுக்கு ரூ. 11,000 முதல் ரூ. 60,000 வரை குறைத்திருப்பதனால் டியாகோ காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

Read More

ஜிஎஸ்டிக்கு பிறகு ஆட்டோமொபைல் துறை பெரிய அளவில் விலை மாற்றங்களை பெற்று வரும் நிலையில் மாருதி சுசுகி கார்கள் மற்றும் எஸ்யூவி-கள் விலை ரூ. 2,300 முதல் ரூ. 23,400 வரை குறைக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி ஜிஎஸ்டி விலை விபரம் நாட்டின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசுகி நிறுவனம் ரூ. 3.80 லட்சம் தொடங்கி ரூ.12.10 லட்சம் வரையிலான விலையில் மொத்தம் 18 கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. சிறிய ரக ஆல்டோ கார் ஆல்டோ மற்றும் ஆல்டோ கே10 மாடல்களில் மேனுவல், ஏஎம்டி கியர்பாக்ஸ் போன்றவை பெற்ற மாடல்களில் ரூ. 2,300 முதல் அதிகபட்சமாக ரூ. 5400 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. வேகன்ஆர் வேகன்ஆர் கார் மாடல் விலை ரூ. 5300 முதல் ரூ. 8,400 வரை விலை சரிந்துள்ளது. செலிரியோ ஜிஎஸ்டிக்கு பிறகு செலிரியோ கார் மாடல் விலை ரூ. 5900 முதல்…

Read More

சென்னையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் அதிகபட்சமா ரூ.2,165 வரை விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக ஹிமாலயன் மாடல் ரூ. 2700 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஜிஎஸ்டி விலை ஜிஎஸ்டிக்கு பிறகு ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் மாடல்களின் அதிகார்வப்பூர்வ சென்னை ஆன்-ரோடு விலை உள்பட விலை குறைப்பு குறித்து முழுமையாக காணலாம். டெல்லி போன்ற நகரங்களில் என்ஃபீல்டு மாடல்கள் விலை ரூ.100க்கு குறைந்த அளவே குறைக்கப்பட்ட நிலையில் சென்னையில் அதிகபட்சமாக தன்டர்பேர்டு 350 மாடல் ரூ. 2,615 வரை குறைக்கப்பட்டுள்ளது. வரவுள்ள புதிய  ஹிமாலயன் 411சிசி எஃப்ஐ எஞ்சினை பெற்ற மாடல் அதிகபட்சமாக ரூ. 2,717 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள விலை பட்டியலில் கான்டினென்டினல் ஜிடி மாடல் விலை மட்டுமே ரூ.301 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்குகள் முழுவிலை பட்டியல் (சென்னை ஆன்-ரோடு) மாடல்கள் முந்தைய விலை ஜிஎஸ்டி விலை வித்தியாசம் புல்லட் 350 1,27,925 1,26,264 -1,661…

Read More

டொயோட்டா மோட்டார் கார்ப்ரேஷனின் கீழ் செயல்படுகின்ற பட்ஜெட் விலை கார் பிராண்டு மாடலான டைஹட்சூ இந்திய சந்தையில் சிறிய ரக கார்களை விற்பனை செய்வதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளை தொடங்கியுள்ளது. டைஹட்சூ கார்கள் டொயோட்டா குழுமத்தின் அங்கமாக உள்ள சிறிய ரக கார் தயாரிப்பாளரான டைஹட்சூ பட்ஜெட் விலையில் தரமான கார்களை ஜப்பான், மலேசியா, சீனா போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகின்ற டைஹட்சூ இந்தியாவில் மாருதி சுசூகி, ஹூண்டாய் , டட்சன் போன்ற நிறுவனங்களின் சிறிய ரக கார்கள் உள்பட ரூ. 5 லட்சம் விலைக்குள் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. க்விட்,ஆல்ட்டோ  மற்றும் இயான் போன்ற சிறிய ரக பட்ஜெட் விலை கார் மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையிலான எந்த மாடல்களையும் டொயோட்டா தற்போது விற்பனை செய்யாமல் உள்ள இடைவெளியை தனது பட்ஜெட் பிராண்டு வாயிலாக ஈடுகட்டும் நோக்கில் வளர்ந்து வருகின்ற இந்திய மோட்டார் சந்தையில் தனது கவனத்தை செலுத்த…

Read More

ஹோண்டா கார்ஸ் இந்தியா பிரிவு தங்களுடைய மாடல்களின் விலையை ரூ. 10,000 முதல் ரூ.1.30 லட்சம் வரை குறைத்துள்ளது. ஹைபிரிட் கார் மாடலான ஹோண்டா அக்கார்டு விலை அதிகரிக்கப்பட உள்ளது. ஹோண்டா கார்ஸ் -ஜிஎஸ்டி ஜிஎஸ்டி வருகைக்கு பின்னர் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில் ஹோண்டா இந்தியா பிரிவு தங்களுடைய ஹேட்ச்பேக் கார் முதல் ஹைபிரிட் கார்கள் வரை விலை மாற்றத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக விலை விபரம் மாநிலம் , டீலர்கள் மற்றும் மாவட்ட வாரியாக மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரியோ மற்றும் ஜாஸ் கார்களுக்கு ரூ. 12,300, டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 12,300 மற்றும் பிரசத்தி பெற்ற செடான் ரக சிட்டி காருக்கு ரூ. 28,500 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. அமேஸ் மாடலுக்கு 13,800 ரூபாய் , பிஆர்-வி எஸ்யூவி மாடலுக்கு 30,390 ரூபாய் மற்றும் பிரிமியம்…

Read More