வானா கிரை எனப்படும் ரேன்சம்வேர் வகையைச் சார்ந்த தீம்பொருள் மே மாதம் முதன்முதலாக பரவியதை தொடர்ந்து 150 க்கு மேற்பட்ட நாடுகளில் 3.50 லட்சம் கனிணிகள் பாதிப்பட்டிருந்த நிலையில் ஜப்பான் ஹோண்டா கார் தயாரிப்பு பிரிவு வானா கிரை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வானா கிரை சைபர் தாக்குதல் ஜப்பான் நாட்டின் டோக்கியா தலைநகரின் அருகில் உள்ள சயாமா ஆலையில் வானாக்கிரை ரேன்சம் வேர் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறியப்பட்டது முதல் தற்காலிகமாக சில நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆலை நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஆலையில் ஹோண்டா ஆக்கார்டு, ஒடிஸி மினிவன் மற்றும் ஸ்டெப் வேகன் போன்ற கார்கள் ஒரு நாளைக்கு 1000 கார்கள் உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ள இந்த ஆலையில் முதன்முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வானாக்கிரை தாக்குதலுக்கு உள்ளாகியதை கண்டுபிடித்த நிலையில் திங்கட்கிழமை உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இந்த பிரச்சனைக்கு தீர்வு…
Author: MR.Durai
எதிர்காலத்தில் தானியங்கி வாகனங்கள் முதல் தானியங்கி விமானங்கள் வரை மோட்டார் சார்ந்த துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ள நிலையில் முதல் ஏர்பஸ் தானியங்கி ஹெலிகாப்டர் முதல் பயணம் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏர்பஸ் தானியங்கி ஹெலிகாப்டர் ஏர்பஸ் ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிகாப்டர்ஸ் குயிம்பால் என இரு நிறுவனங்களில் கூட்டணியல் உருவாகியிருக்கும் முதல் VSR700 உலங்கு தானியங்கி வானூர்தி 7 மாதங்களில் வடிவமைக்கப்பட்டிருமப்பதாக ஏர்பஸ் தெரிவித்துள்ளது. Optionally Piloted Vehicle (OPV) என அழைக்கப்படுகின்ற தானியங்கி ஹெலிகாப்டரில் பைலட் இல்லாமல் தானாகவே மேலே எழும்புதல், இறங்குவது, பறத்தல் உள்பட சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுகின்ற வகையில் VSR700 ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் கூடுதலாக சோதனையின் பொழுது பாதுகாப்பினை கருதி பைல்ட் ஒருவரும், இதன் செயல்பாட்டை கண்கானித்துள்ளார். மேலும் இந்த ஹெலிகாப்டரின் அதிகபட்ச சுமை தாங்கும் திறன் 250 கிலோவாக உள்ளது. பயன்பாட்டினை பொறுத்து அதிகபட்சமாக தொடர்ந்து 10 மணி நேர ஆகாயத்தில் பறக்கும் திறன் பெற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.…
சென்னையை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கஸ்டமைஸ் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக கிளாசிக் 500 மற்றும் கான்டினென்ட்டில் ஜிடி அடிப்படையில் விற்பனை செய்ய உள்ளது. ராயல் என்ஃபீல்டு கஸ்டமைஸ் உலகின் மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டு கஸ்டமைஸ் எனப்படும் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை விரைவில் தனது ஷோரூம்களில் விற்பனை செய்ய உள்ளது. இதற்காக இந்தியாவின் முன்னணி கஸ்டமைஸ் நிறுவனங்களான இன்லைன் த்ரீ, டிஎன்டி மோட்டார் சைக்கிள்ஸ், புல் சிட்டி கஸ்டம்ஸ் மற்றும் பாம்பே கஸ்டம் வோர்க்ஸ் போன்ற மாற்றியமைக்கும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி வாயிலாக வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான கஸ்டமைஸ் ஆப்ஷன் மற்றும் ரைடிங் கியர்ஸ் எனப்படும் ஆடைகள் உள்பட ஹெல்மெட் போன்றவற்றை தயாரித்து ஆன்லைன் மற்றும் தனது ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்ய உள்ளது. கார்கோ பேன்ட்ஸ,ரைடிங்கியர் ஆக்செரீஸ்களான க்ளோவ்ஸ், பெல்ட்ஸ், ஹெல்மெட்,…
ஸ்கூட்டர் சந்தையில் புதிய வரவாக ஹோண்டா நிறுவனத்தின் மற்றொரு ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா க்ளிக் (Honda Cliq) ரூ. 42,499 விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஹோண்டா க்ளிக் இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் மிகவும் சவாலான விலையில் ஊரக பகுதி மற்றும் வளரும் நகரங்களை குறிவைத்து புதிய கிளிக் ஸ்கூட்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்ந ஸ்கூட்டர் நாடு முழுவதும் பண்டிகை காலத்துக்கு முன்தாக கிடைக்க உள்ள நிலையில் இதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள தபுகாரா ஹோண்டா ஆலையில் க்ளிக் உற்பத்தி செய்யப்பட உள்ளது. டிசைன் ஊரக பகுதிகளில் பயணிக்கும் வகையில் மிக உறுதியான கட்டுமானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள க்ளிக் மாடலில் முக்கிய அம்சமாக இந்தியாவின் முதல் பிளாக் பேட்டர்ன் பெற்ற டயரை பொருத்தப்பட்டதாக அறிமுகம் ஆகியுள்ளது. கடுமையான மழை நேரங்களிலும், மோசமான சாலைகளில்…
தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து நாளைய அதாவது ஜூன் 21, 2017 தேதிக்கான பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. டீசல் விலை 21.6.2017 ஜூன் 20ந் தேதி அதாவது இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.04, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.85 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.00 பைசாவும், டீசலுக்கு 0.01 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன்- 21ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.04 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.84 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.
ராயல் என்ஃபீலடு நிறுவனத்தின் புதிய கஸ்டமைஸ் பைக்குகளாக ஹிமாலயன் ஜென்டில்மேன் பிராட் மற்றும் சர்ஃப் ரேஸர் என இரு மாடல்கள் பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கஸ்டம் பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஜென்டில்மேன் பிராட் 2017 வீல்ஸ் அன்ட் வேவ்ஸ் விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பொழுது இரு கஸ்டமைஸ் மாடல்களை சென்னையை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு மாடல் கான்டினென்டினல் GT மாடலை அடிப்படையாக கொண்ட ஜென்டில்மேன் பிரேட் மற்றும் சர்ஃப் ரேஸர் ஆகும். இங்கிலாந்தைச் சேர்ந்த சின்ரோஜா (Sinroja) மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் துனையுடன் மிக நேர்த்தியாக இரு மாடல்களும் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. ஹிமாலயன் அட்வென்சசர் ரகத்தில் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள ஜென்டில்மேன் பிராட் கஸ்டமைஸ் பைக்கில் வெள்ளை வண்ணத்துடன் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டுள்ள கிரே பூச்சினை பெற்றுள்ள இந்த மாடலில் 16 அங்குல வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பழமையான தோற்றத்தை…