இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 30 விபத்துகள் வேகத்தடை வாயிலாக ஏற்படுவதுடன் சராசரியாக ஒருநாளைக்கு 9 நபர்கள் இறப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். ஆபத்தான வேகத்தடை வேகத்தை குறைப்பதற்காக மற்றும் விபத்தை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற ஸ்பீடுபிரேக் எனப்படும் வேகத்தடையால் தினசரி 30 விபத்துகள் நாடு முழுவதும் ஏற்படுவதுடன்,இதனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 9 உயிர்கள் பறிக்கப்படுகின்றன என அதிர்ச்சி தகவலை அமைச்சர் நிதின் 5rகட்காரி தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் மரணமைடைபவர்களில் வேகத்தடை குறித்தும் கணக்கு எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் 2014 ஆம் ஆண்டின் வேகத்தடை மரணம் குறித்தான விபரங்களை வெளியிடவில்லை, ஆனால் 2015 ஆம் ஆண்டிற்கான விபரங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என இரு நாடுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகளால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 2937 மரணங்கள் மட்டுமே..! ஆனால் இந்தியாவில் உள்ள வேகத்தடையால்…
Author: MR.Durai
மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் ரெனால்ட் கார் தயாரிபு நிறுவனம் சிறப்பு மழைக்கால கார் பரிசோதனை முகாம் ஒன்றுக்கு இன்று 19ந் தேதி முதல் ஜூன் 25ந் தேதி வரை தங்களுடைய சேவை மையங்கள் வாயிலாக வழங்குகின்றது. ரெனால்ட் இந்தியா க்விட் , டஸ்ட்டர் போன்ற பிரசத்தி பெற்ற கார்களை விற்பனை செய்கின்ற ரெனால்ட் இந்தியா நிறுவனம் தொடங்க உள்ள மழைக்காலத்தில் கார்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 19 ந்தேதி முதல் ஜூன் 25ந் தேதி வரை மழைக்கால கார் பரிசோதனை முகாமினை வழங்குகின்றது. இந்த முகாமில் கார்களை முழுமையாக சோதனை செய்வதுடன், குறிப்பிட்ட சில பாகங்கள் மற்றும் துனை கருவிகளுக்கு அதிகபட்சமாக 15 சதவிகிதம் விலை கழிவை வழங்குகின்றது. இது தவிர வாகன காப்பிடூ, டயர்கள் போன்றவற்றில் சிறப்புசலுகைகளை வழங்க உள்ளது. மேலும் இலவச கார் வாஷ் செய்து தரப்பட உள்ளது. மற்றொரு சிறப்பு சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு ரெனால்ட்…
தானியங்கி கார் தொடர்பான ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆல்ஃபாபெட் வேமோ நிறுவனத்தின் கூகுள் ஃபயர்ஃபிளை என அழைக்கப்படுகின்ற தானியங்கி கார் விடை பெறுகின்றதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் ஃபயர்ஃபிளை கடந்த 2013 ஆம் ஆண்டில் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான ஸ்டீயரிங், பெடல்கள் என எதுவுமே இல்லாத முதல் முழுமையான தானியங்கி கார் சோதனை ஓட்டத்திற்கான முயற்சியை கூகுள் மேற்கொண்டது. அதன் பலனாக 2015 ஆம் ஆண்டில் முதன்முறையாக கூகுள் தானியங்கி கார் சாலை சோதனைக்கு வந்தது. இன்றைக்கு பல்வேறு நிறுவனங்களும் தானியங்கி கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்ற சூழ்நிலையில் கூகுள் நிறுவனம் முதன்மையாக உருவாக்கி ஒரு சிறிய பாட் வடிவ தோற்றம் அதாவது அவரை விதை போன்ற தோற்ற அமைப்பை பெற்ற கோலா காரை கூகுள் உருவாக்கியது,அதனையே பிற்காலத்தில் Google Firefly என அழைபக்கப்பட்டு வந்தது. இரு இருக்கைகளை பெற்ற இது தானியங்கி காருக்கான சோதனை…
ஆட்டோமொபைல் சந்தையில் பரபரப்பாக பேசப்படுகின்ற நிறுவனங்களில் ஒன்று மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா ஆகும். டெஸ்லா தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் செயல்பட்டு வருகின்றார், அதிகம் இந்நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்களை இங்கே காணலாம். டெஸ்லா மோட்டார்ஸ் 13 வயதுடைய டெஸ்லா நிறுவனத்தை 2003-ல் தொடங்கியவர்கள் மார்ட்டின் எபர்ஹார்ட் மற்றும் மார்க் தர்பென்னிங் போன்றோர் ஆகும். 2004 ஆம் ஆண்டிலே எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் இணைந்தார். நிக்கோலா டெஸ்லா எனும் அமெரிக்காவின் பிரபலமான விஞ்ஞானி பெயரின் அடிப்படையிலே இந்நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. நிக்கோலா டெஸ்லா எடிசன் போல பெரிதும் பேசப்படவில்லை என்றாலும் எடிசனை விஞ்சும் பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவராகும். ஜிஎம் நிறுவனம் 1996-ல் EV1 என்ற பெயரில் முதன்முறையாக மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட மாடலில் மின்சார கார்களில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ஜிஎம் அந்த கார்களை திரும்ப பெற்று அழித்துவிட்டது. மின்சார கார்கள் அழிக்கப்பட்டதன் பின்னணியாகவே மின்சார கார்களை…
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து நாளைய அதாவது ஜூன் 19, 2017 தேதிக்கான பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. பெட்ரோல் விலை 19.6.2017 ஜூன் 18ந் தேதி அதாவது இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.42, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.03 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.27 பைசாவும், டீசலுக்கு 0.14 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன்- 19ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.14 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.89 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது. விலை மாவட்டங்கள் மற்றும் டீலர்களை பொறுத்து மாறுபடும்.
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து நாளைய அதாவது ஜூன் 18, 2017 தேதிக்கான பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஜூன் 17ந் தேதி அதாவது இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.76, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.23 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.34 பைசாவும், டீசலுக்கு 0.20 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 18ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.42, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.03 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது. விலை மாவட்டங்கள் மற்றும் டீலர்களை பொறுத்து மாறுபடும்.