ரெனால்ட் வழங்கும் மழைக்கால கார் பரிசோதனை முகாம்

0

மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் ரெனால்ட் கார் தயாரிபு நிறுவனம் சிறப்பு மழைக்கால கார் பரிசோதனை முகாம் ஒன்றுக்கு இன்று 19ந் தேதி முதல் ஜூன் 25ந் தேதி வரை தங்களுடைய சேவை மையங்கள் வாயிலாக வழங்குகின்றது.

renault duster petrol

Google News

ரெனால்ட் இந்தியா

க்விட் , டஸ்ட்டர் போன்ற பிரசத்தி பெற்ற கார்களை விற்பனை செய்கின்ற ரெனால்ட் இந்தியா நிறுவனம் தொடங்க உள்ள மழைக்காலத்தில் கார்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 19 ந்தேதி முதல் ஜூன் 25ந் தேதி வரை மழைக்கால கார் பரிசோதனை முகாமினை வழங்குகின்றது.

இந்த முகாமில் கார்களை முழுமையாக சோதனை செய்வதுடன், குறிப்பிட்ட சில பாகங்கள் மற்றும் துனை கருவிகளுக்கு அதிகபட்சமாக 15 சதவிகிதம் விலை கழிவை வழங்குகின்றது. இது தவிர வாகன காப்பிடூ, டயர்கள் போன்றவற்றில் சிறப்புசலுகைகளை வழங்க உள்ளது. மேலும் இலவச கார் வாஷ் செய்து தரப்பட உள்ளது.

RenaultLodgyIndia

 

மற்றொரு சிறப்பு சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு ரெனால்ட் செக்யூர் எனப்படும் பேக்கில் 10 சதவிகித சலுகைகள் மற்றும் ஆர்எஸ்ஏ எனப்படும் சாலையோர உதவி வசதி மற்றும் நீட்டிக்கட்ட வாரண்டியை இந்த திட்டத்தில் பெறலாம்.