தமிழக அரசியல் வரலாற்றில் மிக மோசமான காலமாக விளங்குகின்ற இந்த சூழ்நிலையில் தமிழகத்தை விட்டு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறையினர் மாற்று மாநிலங்களை தேடி வரும் நிலையில் திருப்பூர் மாவட்ட இரண்டு எம்.எல்.ஏக்கள் வாகன பதிவிற்கு ஒரே எண்ணுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. திருப்பூர் பரிதாபம் திருப்பூர் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., விஜயகுமார்; தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., குணசேகரன். இருவரும், அ.தி.மு.க., பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே, தொகுதி எல்லையில் நடக்கும் விழா தொடர்பாக, முட்டல், மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில், ஒரே பதிவெண்ணை, இருவரும், தங்கள் ஆதரவாளருக்கு கேட்டு, ஆர்.டி.ஓ.,வை நச்சரித்தது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டி.என்., 39 சிசி- 0707 என்ற பதிவெண்ணை, தனக்கு வேண்டியவரின் டூ – வீலருக்கு ஒதுக்குமாறு, திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, வடக்கு, எம்.எல்.ஏ., கடிதம் அனுப்பினார். அதே எண்ணை, நான்கு சக்கர வாகனத்துக்கு வழங்குமாறு, தெற்கு தொகுதி,…
Author: MR.Durai
இந்தயாவின் சிசிஐ அமைப்பு ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் முறையற்ற விற்பனை சலுகை மற்றும் டீலர்களை கட்டுப்படுத்திய நடவடிக்கைகளுக்கு என 87 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த உத்தரவிட்டுள்ளது. ஹூண்டாய் அபராதம் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியா நிறுவனத்துக்கு காம்பெடிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள அறக்கையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் விலை சலுகை அளவை விட முறையற்ற வகையில் போட்டியாளர்களுக்கு எதிராக செயல்பட்டதற்கும். டீலர்கள் நிறுவனம் பரிந்துரைத்த லூபிரிகன்ட்ஸ் பயன்படுத்தாத டீலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு போன்ற செயல்களால் தற்போது ரூபாய் 87 கோடியை அபராதமாக விதித்துள்ளது. முறையற்ற வகையில் போட்டியாளர்களுடன் குழபத்தை ஏற்படுத்தும் வகையில் எல்லை மீறும் நிறுவனங்களை சிசிஐ கண்கானிப்பதுடன், நாட்டிலுள்ள பெரும்பாலான முக்கிய துறைகளை சிசிஐ கண்கானித்து வருகின்றது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஹூண்டாய் நிறுவனம் ஈட்டிய வருமானத்தில் 0.3 சதவிகிதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.12 ரூபாயும் , டீசல் விலை லிட்டருக்கு 1.24 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 12 காசுகளும், டீசல் லிட்டருக்கு 1 ரூபாய் 24 காசுகளும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை குறைப்பு மற்றும் பெட்ரோல் , டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறையும் நாளை காலை 6 மணியிலிருந்து நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. எவ்வாறு அறியலாம் ? தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை மாறுவதனை எவ்வாறு அறியலாம் என இங்கே காணலாம்..! இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு Fuel@IOC என்ற ஆப் வாயிலாகவோ அல்லது RSP < SPACE > DEALER CODE to 92249-92249 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியும் அறிந்து கொள்ளலாம். ஹிந்துஸ்தான்…
வருகின்ற ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையை தொடர்ந்து அதற்கு முன்பாக மோட்டார் தயாரிப்பார்கள் சலுகைகளை வழங்க தொடங்கி உள்ள நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இணைந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் ஐஷர் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஜூன் 17ந் தேதி முதல் தங்களுடைய மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சிறப்பு ஜிஎஸ்டி விலை சலுகையை அறிவித்துள்ளது. என்ஃபீல்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மாடல்கள் வாரியாக எவ்வளவு குறைக்கப்படும் போன்ற விபரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தன்னுடைய மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 4,500 வரை விலை சலுகையை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுதவிர மற்ற மோட்டார் வாகன தயாரிப்பாளர்களும் ஜிஎஸ்டி வருகைக்கு முந்தைய சலுகைகளை வழங்குவார்கள். ஜிஎஸ்டி ஜிஎஸ்டி வருகையால் 350சிசி திறனுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு…
இந்தியாவில் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 20 சதவிகித மாடல்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலை வரும் ஆண்டிற்குள் 90 சதவிகிதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. ட்ரையம்ப் பைக்குகள் இந்திய சந்தையில் டிரையம்ப் நிறுவனம் 5 பிரிவுகளில் 20க்கு மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது. மானசேர் அருகே அமைந்துள்ள ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் ஆலையில் 20 சதவிகித அளவிற்கே உற்பத்தி செய்யப்படுகின்றது. வருகின்ற 2018 ஆம் ஆண்டு முதல் 90 சதவிதமாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜூன் முதல் மே வரையிலான இந்த நிதி ஆண்டில் 200 பைக்குகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் 1200 பைக்குகளாக உயர்த்த திட்டமிட்டு வருகின்றது. சமீபத்தில் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் ரூ.8.50 லட்சத்தில் புதிய 2017 ஸ்டீரிட் ட்ரிபிள் எஸ் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.
சென்னையில் மேன் இந்தியா நிறுவனத்தின் விஜய் எர்த்மூவிங் எக்யூப்மென்ட் சார்பில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திறக்கப்பட்டுள்ளது. மேன் இந்தியா நிறுவனத்தின் 64வது டீலராக தொடங்கப்பட்டுள்ளது. மேன் டிரக் டீலர் இந்தவருடத்தின் 4 வது டீலாரக திறக்கப்பட்டுள்ள விஜய் எர்த்மூவிங் எக்யூப்மென்ட் டீலருக்கு முன்பாக சோலப்பூர், புனே மற்றும் விஜயவாடா போன்ற பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக சிறப்பான வரளச்சி பெற்று வருகின்ற மேன் டிரக நிறுவனத்தின் பிதாம்பூர் ஆலையில் முதன்முறையாக 25000 வாகனங்கள் உற்பத்தியை எட்டியுள்ளது. மேலும் கடந்த டிசம்பர் 2016-ல் CLA எவோ வரிசையில் 16 டன் முதல் 49 டன் வரையிலான பிரிவுகளில் டிரக்குகளை அறிமுகம் செய்திருந்தது. தென்னிந்தாயிவின் 24வது டீலராக தொடங்கப்பட்டுள்ள விஜய் எர்த்மூவிங் எக்யூப்மென்ட் விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவுகளுடன் மொத்தம் 13,000 சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ளது.இதில் 3 சர்வீஸ் பே உள்பட கஸ்டமர் மற்றும் டிரைவர் லான்ஞ் போன்றவை இடம்பெற்றுள்ளது.