நாளை முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.12 ரூபாயும் , டீசல் விலை லிட்டருக்கு 1.24 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 12 காசுகளும், டீசல் லிட்டருக்கு 1 ரூபாய் 24 காசுகளும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை குறைப்பு மற்றும் பெட்ரோல் , டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறையும் நாளை காலை 6 மணியிலிருந்து நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.
எவ்வாறு அறியலாம் ?
தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை மாறுவதனை எவ்வாறு அறியலாம் என இங்கே காணலாம்..!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு Fuel@IOC என்ற ஆப் வாயிலாகவோ அல்லது RSP < SPACE > DEALER CODE to 92249-92249 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியும் அறிந்து கொள்ளலாம்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் “HPPRICE < SPACE > DEALER CODE” to 9222201122 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி அறிந்து கொள்ளலாம்.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் “RSP <SPACE > DEALER CODE” to the number 9223112222 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், 1800 22 4344 என்ற இலவச ஹாட் லைன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் பாரத் பெட்ரோலியம் மூலம் தகவலை பெற விரும்புபவர் SmartDrive செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மூலம் தகவல் பெற விரும்புபவர்கள், My HPCL செயலியை பிளே ஸ்டோரில் பெறலாம்.