இந்தியாவின் பிரபலமான கார்களில் ஒன்றான டிஸையர் காரின் புதிய 2017 மாருதி சுசுகி டிஸையர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசையர் செடான் கார் மே 16ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. மாருதி சுசுகி டிஸையர் கார் மூன்றாவது தலைமுறை மாருதி சுசூகி டிசையர் கார் அறிமுகம் மே 16ந் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்றாம் தலைமுறை டிஸையர் செடான் கார் முற்றிலும் மேம்படுத்தப்பட்டு ஜப்பான மற்றும் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விஃபட் ஹேட்ச்பேக் காரின் அடிப்படை தளத்தில் பல்வேறு விதமான நவீன அம்சங்கள் மற்றும் அடிப்படையான கட்டுமான தரம் உள்பட பல மேம்பாடுகளை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹார்ட்க்ட் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டிஸையர் காரில் 85 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும்…
Author: MR.Durai
கடந்த மார்ச் மாத இந்திய இருசக்கர வாகன விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த பைக்குளின் பட்டியல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது. டாப் 10 ஹோண்டா ஆக்டிவா இந்தியாவின் நெ.1 இருசக்கர வாகனமாக உருவெடுத்துள்ளது. முதல் 10 இடங்களில் ஹீரோ நிறுவனத்தின் 5 மாடல்கள் இடம் பிடித்துள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் 10வது இடத்தில் உள்ளது. இருசக்கர வாகன விற்பனையில் இந்தியாவின் முதன்மையான வாகனம் என்ற பெயரை ஹோண்டா ஆக்டிவா பெற்றுள்ளது. பல வருடங்களாக முன்னிலை வகித்து வந்த ஸ்பிளென்டர் பைக்கை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஸ்கூட்டர் சந்தையின் அபரிதமான வளர்ச்சி ஹோண்டா நிறுவனத்துக்கு மிகப்பெரிய பலமாகவே அமைந்துள்ளது. மேலும் இரண்டாவது ஸ்கூட்டர் தயாரிப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் விளங்குகின்றது. ஹீரோ நிறுவனம் ஸ்கூட்டர் பிரிவில்மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. டாப் 10 பைக்குகள் – மார்ச் 2017 வ.எண் மாடல் விபரம் மார்ச்…
எஞ்சின் (விசைப்பொறி) செயல்பாட்டில் இயங்கும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளான CC , HP ,BHP , PS , NM , RPM போன்றவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். CC – Cubic Capacity எஞ்சினில் அமைந்துள்ள சிலிண்டர்களின் எண்ணிக்கையுடன் ஸ்வெப்ட் வால்யூம் என்பதனை பெருக்கினால் சிசி கிடைக்கும். படத்தில் உள்ளதை கவனியுங்கள் CC=No. of cylinder*swept volume swept volume என்றால் சிலிண்டரின் போர் மற்றும் ஸ்ட்ரோக் என இரண்டையும் பெருக்கினால் கிடைக்கும். Swept volume=Bore*stroke ஸ்வெப்ட் வால்யூம் என்பது கிராங் ஷாஃப்ட் இடம்பெயரும் BDC முதல் TDC வரையிலான இடம் பெயர்வினை stroke என்றும் போர் என்பது அதன் அகலத்தை குறிக்கும். ஒரே வரியில் சிசி என்றால் இடம்பெயர்வின் கன அளவு என்பது பொருளாகும். 2. HP , PS , BHP என்றால் என்ன ? மூன்றுமே பவரை வெளிப்படுத்தும் காரணிகளை குறிப்பிடும் அளவின் குறியீடுகளாகும். மேலும் சில…
இந்திய இருசக்கர வாகன சந்தையில் முதன்மையான மாடலாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முன்னேறியுள்ளது. பைக்குகள் பிரிவில் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் முதன்மையான இடத்தில் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. ஹீரோ ஸ்பிளென்டர் 2106-2017 ஆம் நிதி ஆண்டில் 2,759,835 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2106-2017 ஆம் நிதி ஆண்டில் 2,550,830 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இருசக்கர வாகன பிரிவில் முதன்மையான இடத்தை ஆக்டிவா எட்டியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து ஸ்கூட்டர் சந்தை அபரிதமான வளர்ச்சியை அடைந்து வருகின்றது. பெண்களுக்கு மட்டும் ஸ்கூட்டர் என்ற நிலை முற்றிலும் மாறி இருபாலருக்கு பொதுவானதாக மாறி வரும் ஸ்கூட்டர்கள் மிக சுலபமாக நெரிசல் மிகுந்த சாலைகளில் கையாளுவதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதே ஸ்கூட்டர்களின் மிக முக்கியமான பலமாகும். கடந்த 2015 -2016 ஆம் நிதி ஆண்டில் ஆக்டிவா ஸ்கூட்டர் 2,466,350 விற்பனை செய்திருந்த நிலையில் 16-17 ஆம் நிதி வருடத்தில் 11.09 சதவீத…
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இரண்டுமே மிக சிறப்பான வகையில் கார்களில் உதவும் தன்மை கொண்ட செயலியாகும். இரண்டுமே கார்களில் வழங்கப்படுகின்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இடம்பெற்றிருக்கும். ஆப்பிள் கார் பிளே ஆப்பிள் ஐஓஎஸ் தளத்தில் இயங்கும் கார் பிளே ஆப்ஸ் வாயிலாக ஆப்பிள் ஐபோன் உதவியுடன் உங்களுடைய காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல பயனுள்ள வசதிகளை பெறலாம். குறிப்பாக நேவிகேஷன் , மேசேஜ் , மியூசிக் என பலவற்றை பெற உதவும். ஐபோன்7 ஐபோன் 6 , ஐ போன் 6 பிளஸ் , ஐபோன் 5, ஐபோன் 5c மற்றும் ஐபோன் 5s போன்ற மாடல்களில் இயங்கும். ஆண்ட்ராய்ட் ஆட்டோ கார் பிளே போன்றே ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான சிறப்பு அம்சங்களை கொண்ட ஆட்டோ ஆப்ஸ் வாயிலாக நேவிகேஷன் , மேசேஜ் , மியூசிக் என பலவற்றை காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வாயிலாக பெறலாம். ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்…
2017 மாருதி சுசுகி டிஸையர் காரின் அதிகார்வப்பூர்வ டிசைன் வரைபடத்தை மாருதி வெளியிட்டுள்ளது. வருகின்ற மே மாதம் புதிய டிஸையர் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் ஏப்ரல் 24ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2017 மாருதி சுசுகி டிஸையர் வரும் ஏப்ரல் 24ந் தேதி புதிய மாருதி சுசுகி டிஸையர் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய டிஸையர் கார் புதிய ஸ்விஃப்ட் மாடலை அடிப்பையாக கொண்டதாகும். 2017 டிசையர் மே மாத மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்படும். வருகின்ற ஏப்ரல் 24ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள மாருதி டிஸையர் கார் இந்தியாவில் விற்பனைக்கு மே மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய காரில் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இடம்பெற வாய்ப்பில்லை. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை இடம் பெற்றிருக்கும். நடைமுறையில் உள்ள ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும்…