இந்தியாவின் பிரபலமான கார்களில் ஒன்றான டிஸையர் காரின் புதிய 2017 மாருதி சுசுகி டிஸையர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசையர் செடான் கார் மே 16ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
மாருதி சுசுகி டிஸையர் கார்
- மூன்றாவது தலைமுறை மாருதி சுசூகி டிசையர் கார் அறிமுகம்
- மே 16ந் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
- எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்றாம் தலைமுறை டிஸையர் செடான் கார் முற்றிலும் மேம்படுத்தப்பட்டு ஜப்பான மற்றும் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விஃபட் ஹேட்ச்பேக் காரின் அடிப்படை தளத்தில் பல்வேறு விதமான நவீன அம்சங்கள் மற்றும் அடிப்படையான கட்டுமான தரம் உள்பட பல மேம்பாடுகளை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ஹார்ட்க்ட் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டிஸையர் காரில் 85 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை இடம் பெற்றிருக்கும். நடைமுறையில் உள்ள ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த இல்லாத நிலையில் டீசல் என்ஜின் மாடலில் கூடுதலாக சியாஸ் காரில் இடம்பெற்றுள்ள எஸ்ஹெச்விஎஸ் மைல்டு ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷனுடன் வந்துள்ளது.
மேலும் இரு மாடல்களிலும் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இன்டிரியரில் புதிய ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்களின் அடிப்படையிலான டேஸ்போர்டை போன்றவற்றை பெற்று விளங்குகின்ற இந்த மாடலில் அகலாமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளுடன் பல்வேறு அம்சங்களை பெற்றிருப்பதுடன், கூடுதலான வீல் பேஸ் பெற்ற மாடலாக வந்துள்ளாதல் பின்புற இருக்கைகளுக்கு இடவசதி சற்று அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
வேரியன்ட் விபரங்கள்
மாருதி டிசையர் பெட்ரோல்
Lxi (MT only)
Vxi (MT and AMT)
Zxi (MT and AMT)
Zxi+ (MT and AMT)
மாருதி டிசையர் டீசல்
Ldi (MT only)
Vdi (MT and AMT)
Zdi (MT and AMT)
Zdi+ (MT and AMT)
வருகை
டிசையர் காரில் நீலம், பிரவுன், சிவப்பு, கிரே, சிலவர் மற்றும் வெள்ளை என 6 வகையான நிறங்களில் மே 16ந் தேதி அதிகார்வப்பூர்வமாக புதிய டிஸையர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
டிசையர் கேலரி ; 2017 மாருதி டிசையர் கார் படங்கள் முதல் பார்வை