மேம்படுத்தப்பட்ட 2017 ஹூண்டாய் எக்ஸென்ட் காம்பேக்ட் ரக செடான் கார் ரூ. 5.38 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய 1.2லிட்டர் டீசல் எஞ்சினை பெற்றதாக எக்ஸென்ட் வந்துள்ளது. 2017 ஹூண்டாய் எக்ஸென்ட் முந்தைய 1.1 லிட்டர் டீசலுக்கு மாற்றாக புதிய 1.2 லிட்டர்டீசல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. முகப்பு மற்றும் பின்புற தோற்ற அமைப்பில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக வந்துள்ளது. 5 விதமான நிறங்களில் எக்ஸென்ட் கார் கிடைக்க உள்ளது. எக்ஸென்ட் செடான் ரக காரில் முந்தைய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு மாற்றாக கூடுதல் பவரை வெளிப்படுத்தும் வகையிலான மேம்படுத்தப்பட்ட புதிய 1.2 லிட்டர் டீசல் 75 hp மற்றும் 171Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் புதிய கிராண்ட் ஐ10 காரில் இடம்பெற்றுள்ளது. புதிய டீசல் எஞ்சின் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் தரவல்லதாகும். இதன் 1.2 லிட்டர் கப்பா எஞ்சின் மாடல் …
Author: MR.Durai
கடந்த 2016 -2017 ஆம் நிதி ஆண்டில் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் 7 கார்கள் முதல் டாப் 10 கார் பட்டியிலில் இடம்பெற்றுள்ளது. டாப் 10 கார் 16-17 நிதி ஆண்டு முதல் 10 இடங்களில் 7 இடங்களை மாருதி சுசுகி பெற்று விளங்குகின்றது. 13வது ஆண்டாக தொடர்ந்து மாருதி சுசுகி ஆல்டோ கார் முதன்மை வகிக்கின்றது. க்விட், எலைட் ஐ20 , கிராண்ட் ஐ10 மாடலும் இடம்பெற்றுள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 9வது இடத்தை பிடித்துள்ளது. முழுமையான பட்டியலை படத்தில் காணலாம்..
கடந்த டிசம்பர் 2016ல் விற்பனைக்கு வந்த பஜாஜின் டோமினார் 400 ஸ்போர்ட்டிவ் க்ரூஸர் பைக் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பைக்கின் விலை ரூபாய் 2 ஆயிரம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் உயர்ந்துள்ளது. டோமினார் 400 விலை டோமினார் 400 பைக் ஆரம்ப விலை ரூ. 1.40 லட்சம் ஆகும். ஏபிஎஸ் பெற்ற மாடல் விலை ரூ. 1.54 லட்சம் ஆகும். 34.50 hp பவரை வெளிப்படுத்தும் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 15ந் தேதி இந்திய சந்தையில் விறுபனைக்கு வெளியிடப்பட்ட பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பவர்ஃபுல்லான மாடல் அறிமுகத்தின் பொழுது ரூ. 1.36 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த நிலையில் தற்பொழுது ரூபாய் 2000 வரை வேரியன்ட் வாரியாக உயர்த்தப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு மிகுந்த சவலாக விளங்குகின்ற டோமினார் 400 பைக் அபரிதமான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. தொடர்ந்து முன்பதிவில் மிக சிறப்பான எண்ணிக்கையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. குறைந்தபட்ச…
டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன பிரிவின் பாரத்பென்ஸ் பிராண்டில் புதிதாக 16 டன் பாரத்பென்ஸ் இன்டர்சிட்டி கோச் பஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புற நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் புதிய பேருந்து வந்துள்ளது. பாரத்பென்ஸ் இன்டர்சிட்டி கோச் பஸ் 16 டன் எடை பிரிவில் 12மீட்டர் நீளமுள்ள இன்டர்சிட்டி பஸ் அறிமுகம் செய்யபட்டுள்ளது. புற நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு ஏற்றதாகும். 258 hp பவரை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 9 டன் பிரிவில் பள்ளி, டூரிஸ்ட் மற்றும் பணியாளர் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான பேருந்துகளை டெய்ம்லர் விற்பனை செய்து வருகின்ற நிலையில் அடுத்த கட்டமாக 16 டன் எடை கொண்ட பிரிவில் புற நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பான சொகுசு அம்சங்களுடன் கூடிய பேருந்தாக இன்டர்சிட்டி கோச் பஸ் விளங்கும் என டெய்ம்லர் இந்தியா தெரிவிக்கின்றது. 12 மீட்டர்…
ரூபாய் 21 லட்சம் ஆரம்ப விலையில் டாடா ஏஎம்டி பஸ்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 9-12 மீட்டர் பிரிவில் உள்ள டாடா ஸ்டார்பஸ் மற்றும் டாடா அல்ட்ரா என இரு ஏஎம்டி மாடல்கள் வந்துள்ளது. டாடா ஏஎம்டி பஸ்கள் டாடா மோட்டார்சின் ஸ்டார்பஸ் மற்றும் அல்ட்ரா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 23-54 இருக்கைகள் கொண்ட பேருந்துகளாக வந்துள்ளது. வேப்கோ நிறுவனத்தின் டாடா உருவாக்கிய ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஆட்டோமேட்டேட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் எனப்படுகின்ற ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட ஸ்டார்பஸ் மற்றும் அல்ட்ரா பிராண்டில் மிக எளிதாக நகர்புற சாலைகளில் கையாளும் திறனை வெளிப்படுத்துவடன் கூடுதலாக 3 சதவீத எரிபொருள் சிக்கனத்தை பெற்றுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. நவீன தலைமுறை நுட்பங்களை பெற்றதாக வந்துள்ள ஏஎம்டி பேருந்துகள் மேனுவல் ,ஆட்டோமேட்டிக் வசதியுடன் பவர் மற்றும் எக்னாமிக் என இருவிதமான மோடுகளை கொண்டதாக உள்ளது. இந்த பேருந்து கியர்பாக்சில் இடம்பெற்றுள்ள ஆட்டோமேட்டிக் கியர் டிடெக்சன்…
பிரபலமான மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடலில் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்பட பல நவீன ஆப் வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 வகையான புதிய வசதிகளை XUV500 பெற்றுள்ளது. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஈக்கோசென்ஸ், கனெக்டேட் ஆப்ஸ் மற்றும் எமெர்ஜென்சி அழைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான ஆப்ஸ்கள் மற்றும் ஸ்மார்ட்போன் சேவைகளை பெறலாம். மொபைல் வைஃபை ஹாட்ஸ்பாட் இணைப்புடனும் இந்த வசதிகளை பெறலாம். W6 வேரியன்ட் முதல் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகளை தவிர W10 டாப் வேரியன்டில் புதிதாக பிரவுன் நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது. W6 வேரியன்ட் முதல் கிடைக்கின்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஈக்கோசென்ஸ், கனெக்டேட் ஆப்ஸ் மற்றும் எமெர்ஜென்சி அழைப்புகள் சேவையில் பல்வேறு நவீன வசதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக கனெக்டேட் ஆப்ஸ் வாயிலாக ப்ரீ லோடேட் ஆக கானா, கிரிக்கெட் லைவ், ஜூமேடா மற்றும் புக் மை ஷோ உள்பட மேலும் பல செயலிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், ம்யூசிக், லைவ் கிரிக்கெட் ஸ்கோர்…