Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

தொடக்கநிலை ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிசன் கார் ரூபாய் 3.88 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 6.2இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இயான் பெற்றுள்ளது. இயான் ஸ்போர்ட்ஸ் எடிசன் எரா பிளஸ் மற்றும் மேக்னா பிளஸ் என இரு வேரியன்டில் விற்பனைக்கு வந்துள்ளது. எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. 6.2 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. தொடக்கநிலை பிரிவு ஹேட்ச்பேக் கார்களில் முதன்மையான ஆல்டோ 800 காருக்கு போட்டியாக அமைந்திருந்த இயான் மாடலுக்கு சவாலாக ரெனோ க்விட் மற்றும் ரெடி-கோ போன்ற மாடல்கள் மிகுந்த சவாலை ஏற்படுத்தி வருகின்றது. இயான் காரில் 55 hp ஆற்றலையும் 74.5 Nm டார்க்கையும் வழங்கும் 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. ஸ்போர்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள காரில் தோற்ற அமைப்பில் பாடி கிராபிக்ஸ் மற்றும் மேற்கூறை…

Read More

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஃபோர்டு ஃபிகோ எஸ் மாடலில் ஸ்போர்ட்டிவ் சார்ந்த வசதிகளை பெற்றதாக விளங்கும். தோற்றத்தில் சில மாற்றங்களுடன் எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்காது. ஃபோர்டு ஃபிகோ எஸ் ஸ்போர்ட்டிவ் வெர்ஷனாக ஃபோர்டு ஃபிகோ வரவுள்ளது. எஞ்சின் பவர் மற்றும் ஆற்றல் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இடம்பெறாது. கருப்பு வண்ண இன்டிரியருடன் கூடுதல் வசதிகளை பெற்றதாக விளங்கும். இணையத்தில் வெளிவந்துள்ள புதிய ஃபோர்டோ ஃபிகோ எஸ் மாடலின் முன்புறத்தில் தேன்கூடு கிரிலை போன்ற தோற்ற அமைப்புடன் , ஸ்மோக்ட் ஹெட்லைட் , 15 அங்குல அலாய் வீல், பக்கவாட்டில் பாடி கிளாடிங் வசதியுடன் கூடிய எஸ் பேட்ஜ் இடம்ப்பெற்றுள்ளது. இன்டிரியரில் கருப்பு வண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட டேஸ்போர்டு மற்றும் இருக்கைகளை பெற்றதாக ஃபிகோ எஸ் கார் விளங்கும். டாப் டைட்டானியம் வேரியன்டில் மட்டுமே இடம்பெற உள்ள இந்த வேரியன்டில் 88hp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர்…

Read More

சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஜிஎம் ஆலையை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக வெளிவந்த தகவலை எஸ்ஏஐசி நிறுவனம் மறுத்துள்ளது. ஆனால் இந்தியா வருகை குறித்து ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. ஜிஎம் ஆலை இந்தியாவின் செவர்லே கார் பிரிவின் குஜராத் ஹலோல் ஆலை ஏப்ரல் 28 , 2017 முதல் மூடப்படுகின்றது. ஜிஎம் ஆலையை கையகப்படுத்த எந்த ஒப்பந்தமும் மேற்க்கொள்ளப்படவில்லை. இந்திய சந்தைக்கான வருகை குறித்து ஆய்வுகளை SAIC செய்து வருகின்றது. சமீபத்தில் வெளிவந்திருந்த எம்ஜி மோட்டார் இந்தியா வருகை மற்றும் செவர்லே ஆலையை வாங்க உள்ளதாக செய்திகளை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள SAIC நிறுவனம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஜிஎம் செவர்லே ஆலையை வாங்குவதற்கான எவ்விதமான ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்ன திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் ஹலோல் ஆலையை மதிப்பீடு செய்து வருவதாக மட்டுமே சாங்காய் பங்குச் சந்தையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ஆலை முதன்முறையாக ஓபெல் பிராண்டு…

Read More

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் முன்னணி வகிக்கும்  மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனம் புதிதாக பயன்படுத்திய மின்சார கார்களுக்கு முதல் பிரத்யேக டீலரை பெங்களூருவில் திறத்துள்ளது. மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் இந்தியாவின் முன்னணி பழைய கார் விற்பனை மையமாக மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் விளங்குகின்றது. கடந்த 5 வருடங்களில் 50 சதவித வளர்ச்சி அடைந்து 1200க்கு மேற்பட்ட டீலர்களை நாடு முழுவதும் பெற்றுள்ளது. முதல் பயன்படுத்திய மின்சார கார்களுக்கான ஷோரூம் பெங்களூரு HSR லேஅவுட் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி பயன்படுத்திய கார் விற்பனை நிலையமாக செயல்படுகின்ற மஹிந்திரா குழுமத்தின் அங்கமான  மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனம் மிகச் சிறப்பான வளர்ச்சியை நாடு முழுவதும் பழைய கார் விற்பனையில் பதிவுசெய்து வருகின்றது. பல்வேறு பிராண்டுகளில் உள்ள அனைத்து பயன்படுத்திய கார்களையும் தர சான்றிதழுடன் வாங்க ஏற்ற இடமாக உள்ள  ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக பெங்களூரு HSR…

Read More

மேம்படுத்தப்பட்ட 2017 ஹூண்டாய் எக்ஸென்ட் காம்பேக்ட் செடான் ரக மாடல் ஏப்ரல் 20ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. கூடுதல் வசதிகள் மற்றும் தோற்றத்தில் மாற்றங்களை பெற்றதாக எக்ஸ்சென்ட் வரவுள்ளது.  2017 ஹூண்டாய் எக்ஸென்ட் எக்ஸ்சென்ட் செடான் ஏப்ரல் 20ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்படலாம். முன் மற்றும் பின்  தோற்றங்களில்அதிகப்படியான மாற்றத்தை பெற்றிருக்கும். புதிய 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் முந்தைய 1.1 லிட்டருக்கு மாற்றாக சேர்க்கப்பட்டிருக்கும். எக்ஸென்ட் செடான் ரக காரில் முந்தைய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக கூடுதல் பவரை தரவல்ல மேம்படுத்தப்பட்ட புதிய 1.2 லிட்டர் டீசல்  75 hp மற்றும் 171Nm டார்க் வெளிப்படுத்தும் . 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். தற்பொழுது இந்த எஞ்சின் புதிய கிராண்ட் ஐ10 காரில் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. முன்பக்க பம்பர் , மேம்படுத்தப்பட்ட முகப்பு விளக்குடன் கூடிய பகல் நேர…

Read More

இந்திய சந்தைக்கான ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடல் நாளை அதிகார்வப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. காம்பஸ் விற்பனைக்கு ஆகஸ்ட மாத மத்தியில் வெளியிடப்படும் வாய்ப்புகள் உள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஏப்ரல் 12ந் தேதி இந்திய சந்தைக்கான ஜீப் காம்பஸ் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ள முதல் ஜீப் பிராண்டு மாடலாகும் ரூ.19 லட்சத்தில் காம்பாஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை தொடங்கலாம். இந்தியாவின் ஃபியட் நிறுவனத்தின் இராஞ்சகவுன் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள ஜீப் காம்பாஸ் எஸ்யூவி மாடலின் அதிகார்வப்பூர்வ தகவல்கள் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் எஸ்யூவி மாடலின் டீசர் வீடியோ ஒன்றை ஜீப் வெளியிட்டுள்ளது. இந்திய சந்தைக்கான எஞ்சின் விபரங்கள் உறுதி செய்யப்படாத நிலையில் எதிர்பார்க்கப்படுகின்ற எஞ்சின் ஆப்ஷன் 170 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் மற்றும் 140 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர்…

Read More