2017-ம் ஆண்டின் உலகின் சிறந்த காராக ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மற்ற சிறந்த கார்களின் பிரிவுகளிலும் வெற்றி பெற்ற கார்கள் நியூயார்க் ஆட்டோ ஷோ அரங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சிறந்த கார் 2017 வோர்ல்டு கார் ஆஃப் தி இயர் பட்டத்தை ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவி வென்றுள்ளது. உலகின் சிறந்த சொகுசு காராக பென்ஸ் இ கிளாஸ் கார் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிவிக்கப்பட்ட இறுதி போட்டியாளர்களை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள கார்கள் 2017 நியூ யார்க் ஆட்டோ ஷோ அரங்கில் அறிவிகப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்களின் 23 நாடுகளை சேர்ந்த 75 சிறந்த ஆசிரியர்களை கொண்டு தேர்வு செய்யப்படும் இந்த கார்கள் கடந்த 6 மாதங்களாக சோதனை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றுள்ள கார்களின் பட்டியல்… 2017 Car of the Year ஜாகுவார்…
Author: MR.Durai
பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறைய தொடர்ந்து பிஎஸ் 3 வாகனங்களை விற்பனை செய்ய ஏப்ரல் 1 முதல் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் ரூபாய் 5,000 கோடி மதிப்பிலான 1.20 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது. பிஎஸ் 3 தடை மார்ச் 31 வரை மட்டுமே பி.எஸ் 3 வாகனங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் கையிருப்பில் 1.20 லட்சம் பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. சலுகைகளால் ரூபாய் 1200 கோடி வரை வாகன நிறுவனங்களை இழப்பீட்டை சந்தித்துள்ளது. பைக்குகள், கார்கள் , மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை மார்ச் 31க்கு பிறகு பி.எஸ் 3 வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதி மன்றம் அதிரடியாக தடைவிதித்தது. ஏப்ரல் 1 முதல் பி.எஸ் 4 தர மாசு விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்)…
இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜீப் காம்பாஸ் எஸ்யூவி மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி மிகவும் கம்பீரமான தோற்ற அமைப்பை பெற்ற ஸ்டைலிசான மாடலாக காம்பஸ் எஸ்யூவி விளங்குகின்றது. 50 க்கு அதிகமாக பாதுகாப்பு அம்சங்களை பெற்ற மாடலாக விளங்குகின்றது. 160 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் , 170 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் டீசல் எஞ்சினும் இடம்பெற்றுள்ளது. சர்வதேச அளவில் 25.7 மில்லியன் கிமீ தொலைவு ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு சோதனைகள் செய்யப்பட்டுள்ள காம்பஸ் மாடல் இந்தியாவில் உள்ள ஃபியட் ஃபியட் நிறுவனத்தின் இராஞ்சகவுன் ஆலையில் தயரிக்கப்பட உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள காம்பஸ் வலது பக்க டிரைவிங் முறை உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஜீப் பிராண்டின் முதல் மேட் இன் இந்தியா மாடலாக காம்பஸ் விளங்கும். டிசைன் கிராண்ட் செரோக்கீ…
தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது எனவும் பகலில் காலை 9 மணி முதல் 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனை கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க வேண்டும். கமிஷன் தொகையை அதிகரிக்காத பட்சத்தில் மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை விடப்படும். மே 15-ந் தேதி முதல் பகலில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். பெட்ரோலியம் பொருட்களை விற்பனை செய்யும் டீலர்களின் கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நீன்ட நாளைய கோரிக்கைக்கு மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளாத காரணத்தால் மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையாக அறிவிக்கப்படும் என இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாராயனன் தெரிவித்துள்ளார். இந்த கூட்டமைப்பின் கீழ் தமிழகம், கேரளா, கர்நாடகா…
புதிய மோட்டார் வாகன (மசோத) 2016-ல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள புதிய அம்சங்களுக்கு திருத்தங்களும் செய்யப்பட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. மோட்டார் வாகன (மசோதா) 2016 கடந்த 2016 ம் ஆண்டில் லோக்சபாவில் திருத்தங்கள் செய்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூபாய் 10,000 அபராதம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் 5,000 அபராதம் மூன்று மாதங்கள் வரை ஒட்டுநர் உரிமம் முடக்கப்படும். 1989 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் சிறப்பான வகையில் பல திருத்தங்கள் செய்யப்பட்ட பாராளுமன்றம் நிலைக்குழுவில் 16 திருத்தங்களுக்கு அனுமதியும் , மூன்று திருத்தங்களுக்கு அனுமதி அளிக்க வில்லை. வாகன சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் வாரம், பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அபராதம் எவ்வளவு ? மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால், நடைமுறையில் உள்ள சட்டப்படி,…
இந்திய சந்தையிலிருந்து யமஹா ஆர்3 ஸ்போர்ட்டிவ் பைக் டாடல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. பி.எஸ் 4 நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து பி.எஸ் 3 எஞ்சினை பெற்றிருந்த ஆர்3 மாடல் நீக்கப்பட்டுள்ளது. யமஹா ஆர்3 பைக் ஏப்ரல் 1ந் தேதி முதல் பி.எஸ் ஐ தர மாசு விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தியா யமஹா இணைய பக்கத்திலிருந்து YZF-R3 பைக் நீக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் மீண்டும் பி.எஸ் 4 எஞ்சினுடன் வரவுள்ளது. ஆர்3 பைக் மாடலில் 41.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 29.6 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 298மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. டைமன்ட் டைப் பிரேம் அடிச்சட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலின் முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , 7 விதமான அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட மோனோ- சாக்அப்சார்பர் பின்புறத்தில்…