• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பகலில் மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை ..! ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை

by MR.Durai
12 April 2017, 11:35 am
in Auto News, Wired
0
ShareTweetSend

தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது எனவும் பகலில் காலை 9 மணி முதல் 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விற்பனை

  • கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க வேண்டும்.
  • கமிஷன் தொகையை அதிகரிக்காத பட்சத்தில் மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை விடப்படும்.
  • மே 15-ந் தேதி முதல் பகலில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும்.

பெட்ரோலியம் பொருட்களை விற்பனை செய்யும் டீலர்களின் கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நீன்ட நாளைய கோரிக்கைக்கு மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளாத காரணத்தால் மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையாக அறிவிக்கப்படும் என இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாராயனன் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டமைப்பின் கீழ் தமிழகம்,  கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிர உள்ளிட்ட மாநிலங்களில் தான் 25,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் செயல்படுகின்ற மொத்த பெட்ரோல் நிலையங்களில் 95 சதவித பங்களிப்பை  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுள்ளது.

அதாவது நாட்டில் மொத்தமாக  56,190 பெட்ரோலிய டீலர்கள் செயல்படுவதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் கீழ் சுமார் 52,604 பங்க்குகள் செயல்படுகின்றது.

தற்பொழுது பெட்ரோலிய பொருட்கள் விற்பனை செய்யும் டீலர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனைக்கு 2 ரூபாய் 56 பைசாவும் , ஒரு லிட்டர் டீசல் விற்பனைக்கு 1 ரூபாய் 62 பைசாவும் கமி‌ஷனாக பெற்று வருகின்றனர்

அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரையின் படி ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனைக்கு 3 ரூபாய் 33 பைசாவும் , ஒரு லிட்டர் டீசல் விற்பனைக்கு 2 ரூபாய் 12 பைசாவும் என கமிஷனை அதிகரித்து தர வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைக் பெட்ரோலிய டீலர்கள் கேட்டு வருகின்றனர்.

கோரிக்கையை நிறைவேற்றித் தராவிட்டால், மூன்று விதமான போராட்டங்களை பெட்ரோலிய டீலர்கள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். அவை முதற்கட்டமாக மே மாதம் 10ந் தேதி பெட்ரோல், டீசலைக் கொள்முதல் செய்யாமல், ‘கொள்முதல் இல்லா நாளாக’ கடைப்பிடிப்போம்.

அடுத்து மே மாதம் 14-ந் தேதி தொடங்கி ஞாயிறுதோறும் பெட்ரோல் பங்க்குகளை இயக்க மாட்டோம்.

மே மாதம் 15-ந் தேதி முதல் பெட்ரோல் நிலையங்களை பகலில் மட்டுமே அதாவது காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே இயக்குவோம்,” என இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவி ஷிண்டே தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை நிலவரம் பெட்ரோல் டீசல் விலை விபரங்கள் மாறும்

சர்வதேச சந்தையில் நிலவுகின்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படடையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கூடிய விரைவில் அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றதாம்.  தற்போது பெட்ரோல், டீசல் விலை மாற்றம் 15 நாளுக்கு ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.

 

Related Motor News

புதிய பைக் பராமரிப்பு குறிப்புகள் – ஆட்டோ டிப்ஸ்

உங்கள் பைக்கை தினமும் சோதனை செய்வது எப்படி ? – பைக் பராமரிப்பு

சாகசப் பிரியர்கள் விரும்பும் சுஸுகி-யின் ஸ்போர்ட்ஸ் பைக்

இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைந்தது இந்தியன் மோட்டார்சைக்கிள்

எம்.வி அகஸ்டா 2019 ஆம் ஆண்டிற்கான Moto2 ரேஸ் பைக்கை அறிமுகப்படுத்துகிறது

கஸ்டமைஸ்டு பைக் உருவாக்கும் போட்டியை இந்தியாவில் அறிவித்தது ஹார்லி-டேவிட்சன்

Tags: Motorcycle
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan