இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான மாருதி சுசுகி ஆல்டோ கார் 13வது முறையாக இந்தியாவின் முதன்மையான காராக சந்தையில் நிலைத்து நிற்கின்றது. மாருதி சுசுகி ஆல்டோ 17 ஆண்டுகாளாக இந்திய சந்தையில் மாருதி ஆல்டோ விற்பனை செய்யப்படுகின்றது. 13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்தியாவில்அதிகம் விற்பனை செய்யப்படும் மாடலாக விளங்குகின்றது. ஆல்டோ 800 ,ஆல்டோ கே10 மற்றும் சிஎன்ஜி போன்ற மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றது. 2016-2017 ம் நிதி ஆண்டில் 2.41 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ கார் 16-17 ம் நிதி வருடத்தில் 2.41 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இந்தியாவின் முதன்மையான காராக விளங்கும் ஆல்டோ மாடலில் ஆல்டோ 800 , 1 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆல்டோ கே10, ஆல்டோ சிஎன்ஜி உள்பட மூன்று விதமான ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கின்றது. கடந்த செப்டம்பர் 2000ம் ஆண்டில்…
Author: MR.Durai
டெய்ம்லர் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற புதிய பாரத் பென்ஸ் டிரக்குகள் வரிசை BS-IV தர எஞ்சினை கொண்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. 9 டன் முதல் 49 டன் வரையிலான மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை பென்ஸ் டிரக்குகள் அறிமுகம் செய்துள்ளது. பாரத் பென்ஸ் டிரக்குகள் BS-IV தர எஞ்சினை பெற்ற பாரத் பென்ஸ் டிரக்குகளை அறிமுகம் செய்துள்ளது. அறிமுகம் செய்த 5 வருடத்திற்குள் மேம்படுத்தப்பட்ட புதிய பென்ஸ் டிரக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பான மைலேஜ், பாதுகாப்பு, பே லோடு மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகளை பெற்றதாக விளங்குகின்றது. ஏப்ரல் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ் 4 தர எஞ்சினை விதிமுறைகளை பெற்ற டெய்மலர் பென்ஸ் மாடல்கள் கூடுதல் சிறப்பு வசதிகளாக அதிக மைலேஜ், பாதுகாப்பு, அதிக பாரம் தாங்கும் திறன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகளை பெற்றதாக விளங்கும் வகையில் வடிவமைகப்பட்டுள்ளதாக விளங்கும் என டெய்மலர் இந்தியா தெரிவித்துள்ளது. புதிய ரேஞ்ச்…
தென்கொரியா நாட்டின் ஹூண்டாய் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை சென்னையில் அமைவதற்கு வாய்ப்பில்லை என்றே சூழ்நிலையே உருவாகியுள்ளது. கியா மோட்டார்ஸ் சர்வதேச அளவில் மிக சிறப்பான அங்கீகாரத்தை கியா மோட்டார்ஸ் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் சென்னையில் ஆலை அமைக்கவே ஹூண்டாய் திட்டமிட்டருந்தது. தற்பொழுது ஆந்திரா , உத்திராகாண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களை இறுதி செய்துள்ளது. ஹூண்டாய் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற கியா கார் தயாரிப்புநிறுவனம் இந்திய சந்தையில் தொழிற்சாலை அமைப்பதற்கான இறுதி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில் அதில் சென்னை இடம்பெறவில்லை என்பதனால் தமிழகத்தில் கியா நிறுவனம் அமைய வாய்ப்பில்லை என உறுதியாகியுள்ளது. 400 ஏக்கர் நிலம் தமிழக அரசு கியா கார் நிறுவனத்துக்கு அளிப்பதாக அறிவித்திருந்தாலும், இங்கே நிலவக்கூடிய சாதகமற்ற அரசியல் சூழ்நிலையே மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றே நாம் நினைக்கின்றோம். கியா நிறுவனத்தின் இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ள மூன்று நகரங்கள் இவைதான், உத்திரகாண்ட் மாநிலத்தின் பாந்த்நகர் ஆந்திர மாநிலத்தின்…
பி.எஸ் 4 தர எஞ்சினை பெற்ற யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ரெனிகேட் கமாண்டோ மற்றும் ரெனிகேட் ஸ்போர்ட் மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. FI ஆப்ஷனை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூஎம் ரெனிகேட் வரிசை பிஎஸ் 4 தர எஞ்சினை பெற்றுள்ள பைக்குகளில் FI ஆப்ஷனை பெற்றுள்ளது. 24.8hp ஆற்றலை வெளிப்படுத்தும் 279.5 சிசி எஞ்சினை பெற்றுள்ளது. அடுத்த சில மாதங்களில் ரெனிகேட் கிளாசிக் விற்பனைக்கு வரவுள்ளது. இரு மாடல்களிலும் கமாண்டோ மற்றும் ரெனிகேட் ஸ்போர்ட் இரு பைக்குகளிலும் இடம்பெற்றுள்ள எஞ்சின் விபரம் இதோ..! 24.8hp ஆற்றலுடன், 21.8Nm டார்கினை வெளிப்படுத்தும் 279.5 சிசி எஞ்சினை பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 41மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் , பின்புறத்தில் இரட்டை சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் அமைப்பினை கொண்டுள்ளது. க்ரூஸர ரக மாடலாக விற்பனை ரெனிகேட் கமாண்டோ செய்யப்படுகின்ற நிலையில் கூடுதல் ஸ்போர்ட்டிவ் அம்சங்களை பெற்ற மாடலாக…
பாரத் ஸ்டேஜ் 4 தர மாசு கட்டுப்பாடு எஞ்சினை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 ரூ. 1.62 லட்சம் விலையில் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்சன் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆற்றல் மற்றும் டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீலடு புல்லட் 500 27.2 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பிஎஸ் 4 தர எஞ்சினில் EFI பெற்றுள்ளது. எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்சன் வசதியை பெற்றுள்ளது. மோட்டார்சைக்கிள் அரசனாக தொடர்ந்து புல்லட் 500 விளங்குகின்றது. கிரே , பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும். பாரம்பரிய தோற்றத்திலே தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்ற பிரத்யேகமாக புல்லட் 500 பைக்கில் பாரத் ஸ்டேஜ் 4 தர 499சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு முந்தைய மாடலை விட கூடுதலாக அதிகபட்சமாக 27.2 பிஹெச்பி ( 26.1 bhp முந்தைய ஆற்றல்) ஆற்றலுடன் , 41.3 என்எம் ( 40.9 Nm முந்தைய டார்க்) டார்க்கினை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷ்ன் வசதியை பெற்றுள்ளது. இதில்…
இந்தியாவில் ரூபாய் 3.97 கோடி விலையில் லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபாமென்டி சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு வந்தது. 640 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினை பெற்று விளங்குகின்றது. ஹூராகேன் பெர்ஃபாமென்டி ரூ. 3.97 கோடி விலையில் ஹூராகேன் பெர்ஃபாமென்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 640 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 2017 ஜெனிவா மோட்டார் ஷோவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட பெர்ஃபாமென்டி காரில் இடம்பெற்றுள்ள எஞ்சின் விபரம் இதோ.., 5.2 லிட்டர் வி10 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் 640 hp பவர் மற்றும் 600 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதன் பவரை சக்கரங்களுக்கு 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஹூராகேன் பெர்ஃபாமென்டி சூப்பர் கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 2.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இந்த காரின் அதிகபட்ச வேகம்…