வருகின்ற மார்ச் 29ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள டாடா டிகோர் காரினை ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். டிகோர் ஸ்டைல்பேக் எனப்படுகின்ற மிக நேர்த்தியான பூட்டினை பெற்றுள்ளது. டிகோர் முன்பதிவு டியாகோ காரினை அடிப்படையாக கொண்டதே டாடா டிகோர் டீகோர் மாடலின் பின்புறத்தில் அமைந்துள்ள கூபே ரக கார்களுக்கு இணையான பூட்டினை ஸ்டைல்பேக் என டாடா அழைக்கின்றது. 1.05 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெற்றிருக்கும். இந்த காரில் 69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140 Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ…
Author: MR.Durai
பாரத் ஸ்டேஜ் 4 தர மாசு கட்டுப்பாடு என்ஜின் மற்றும் ஏஹெச்ஓ ஆப்ஷனை பெற்ற 2017 டிவிஎஸ் அப்பாச்சி 200 ஆர்டிஆர் 4வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்பாச்சி 200 ஆர்டிஆர் 4வி பிஎஸ் 4 தர மாசு கட்டுப்பாடு என்ஜினை பெற்றதாக அப்பாச்சி 200 ஆர்டிஆர் 4வி வந்துள்ளது. ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியை பெற்றுள்ளது. எப்ஃஐ மாடல் குறித்தான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை மேம்படுத்தப்பட்ட பிஎஸ் 4 தரத்துடன் 198cc ஆயில் கூல்டு இஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 20 பிஹச்பி ஆற்றலையும், 18 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ள அப்பாச்சி 200 பைக்கில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. தோற்ற அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் கூடுதலாக ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியை பெற்றதாக வந்துள்ளது. ஹெட்லைட் ஆன் சுவிட்ச் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. புதிய அப்பாச்சி RTR 200 4V விலை ரூ. 97,800 (எக்ஸ்-ஷோரூம் மும்பை) மற்றும்…
இந்தியாவின் ஜென்ரல் மோட்டார்ஸ் பிரிவின் கீழ் செயல்படும் செவர்லே இந்தியா நிறுவனத்தின் டவேரா , செயில் மற்றும் என்ஜாய் கார்களை இந்திய சந்தையிலிருந்து ஏப்ரல் 1 முதல் நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது. செவர்லே இந்தியா டவேரா , என்ஜாய் மற்றும் செயில் மாடல்கள் சந்தையிலிருந்து நீக்கம் புதிய பீட் , பீட் எசென்சியா போன்ற மாடல்கள் அடுத்த சில வாரங்களில் வரவுள்ளது. கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் பெரிதும் சோபிக்காத டவேரா ,என்ஜாய் மற்றும் செயில் போன்ற மாடல்களை சந்தையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இந்திய சந்தையில் நன்மதிப்பினை இழந்து வரும் செவர்லே கடந்த சில வருடங்களாகவே பெரிதாக சந்தையில் சோபிக்க தவறியதை ஈடுகட்டவே செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி மாடலை களமிறக்கியது. புதிய தலைமுறை செவர்லே பீட் மற்றும் பீட் காரின் அடிப்படையில் உருவாகி வரும் பீட் எசென்சியா செடான் ரக கார் மாடலை இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. இந்த ஆண்டின்…
1500 கோடி முதலீட்டில் தயாராகி வருகின்ற மஹிந்திரா U321 எம்பிவி சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இன்னோவா க்றிஸ்ட்டா காருக்கு எதிரான போட்டியாக நிலைநிறுத்தப்பட உள்ளது. மஹிந்திரா U321 வடஅமெரிக்காவில் அமைந்துள்ள மஹிந்திராவின் தொழிற்நுட்ப பிரிவின் முதல் மாடலாக உருவாக்கப்பட்டு வருகின்ற புதிய ரக எம்பிவி மாடல் க்றிஸ்ட்டா காருக்கு எதிராக பல்வேறு பிரிமியம் அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது. மோனோகூ பாடியுடன் தயாராகி வருகின்ற இந்த காரில் 1.9 லிட்டர் டீசல் என்ஜின் அல்லது 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் கூடுதலாக சாங்யாங் நிறுவனத்தின் சார்பாக புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷன் கொண்டதாக வரக்கூடிய இந்த மாடலில் ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக் போன்ற ஆப்ஷன்களை அடிப்படையாக அனைத்து வேரியன்டிலும் இடம்பெற்றிருக்கும். image source – iab
இந்தோனேசியா பைக் ஆர்வலர் பஜாஜ் பல்ஸர் 150 UG2 பைக்கினை ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்காக மாற்றி அசத்தியுள்ளனர். அட்வென்ச்சர் பைக்காக ஹிமாலயன் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பல்ஸர் 150 பைக் 150சிசி பைக் சந்தையில் விற்பனை பஜாஜ் பல்ஸர் 150 செய்யப்படுகின்றது. அட்வென்ச்சர் ரக பிரிவில் 411சிசி என்ஜினை பெற்ற மாடலாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விளங்குகின்றது. ஹிமாலயன் பைக்கில் 24.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 411சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 32 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது. பல்ஸர் 150 UG2 பைக்கில் 143.9 சிசி மாடலில் 13.52 PS ஆற்றலுடன் 12.28 Nm டார்க்கினை வெளிப்படுத்துவதுடன் 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது. பல்சர் 150 பைக்கில் ஹிமாலயன் பைக் போன்றே கூடுதலான ஆக்செரீஸ்கள் மற்றும் தோற்ற அமைப்புகளை மாற்றியமைத்து ஹிமாலயனுக்கு இணையான தோற்ற அமைப்பினை பெற்றதாக விளங்குகின்றது. ஹிமாலயன் பைக்கை…
கடந்த 2011ல் சந்தைக்கு வந்த ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற ஹீரோ இம்பல்ஸ் பைக் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் தனது இணைய பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது. 150சிசி என்ஜினை இம்பல்ஸ் பைக் பெற்றிருந்தது. ஹீரோ இம்பல்ஸ் முதன்முறையாக 2010 ஆம் ஆண்டு இம்பல்ஸ் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இம்பல்ஸ் விற்பனைக்கு வந்தது. 150சிசி என்ஜினை இம்பல்ஸ் பைக் பெற்றுள்ளது. 149.2 cc சிங்கிள் சிலிண்டர் என்ஜினை பெற்று 13.2 பிஎஸ் அதிகபட்ச ஆற்றலுடன் 13.4 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷனை பெற்றதாக உள்ளது. 245மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆப்ஷனுடன் ஆஃப்ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும் இம்பல்ஸ் மாடலில் புதிதாக கூடுதல் சிசி கொண்ட வேரியன்டை பெற்ற மாடலாக வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தமாதிரியான எந்தவொரு திட்டத்தையும் ஹீரோ செயல்படுத்தும் திட்டமில்லை என்றே…