Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற புத்தம் புதிய மாருதி சுசூகி டிஸையர் செடான் ரக மாடல் புதிய ஸ்விஃப்ட் காரினை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். புதிய மாருதி சுசூகி டிஸையர் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற புதிய ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக கொண்டதாக வரவுள்ளது. புதிய டிஸையர் நவீன தலைமுறைக்கு ஏற்ப வசதிகளை பெற்றதாக விளங்கும். ஏப்ரல் அல்லது மே 2017 மாதத்தில் விற்பனைக்கு வரலாம். மாருதி பலேனோ காரின் பிளாட்பாரத்தினை அடிப்படையாக கொண்டு இலகுஎடை மற்றும் உறுதிமிக்க பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு ஜப்பான் மற்றும் ஐரோப்பா நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக கொண்டதே புதிய டிஸையர் காராகும். சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற காரில் இடம்பெற்றுள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை பெற்றிருக்கும். நடைமுறையில் உள்ள ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.…

Read More

மேம்படுத்தப்பட்ட புதிய டொயோட்டா கரோல்லா அல்டிஸ் செடான் காரின் நோற்ற அமைப்பில் சில மாற்றங்களுடன் கூடுதல் வசதிளை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது. புதிய கரோல்லா அல்டிஸ் கரோல்லா அல்டிஸ் காரின் தோற்றத்தில் சில மாற்றங்கள் பெற்றிருக்கும். புதிய மாடலின் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இருக்காது. வருகின்ற மார்ச் 15 , 2017-ல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகின்றது. ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யபட்டுள்ள 2017 அல்டிஸ் காரின் முன்புறத்தில் புதிய பம்பருடன் எல்இடி ரன்னிங் விளக்குகள் இணைந்த எல்இடி முன்பக்க விளக்குடன் வரவுள்ளது. இன்டிரியரில் நவீன தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களாக ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவினை பெற்றிருக்கூடிய 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , டாப் வேரியண்டில் 6 காற்றுப்பைகள் உள்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக வரவுள்ளது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற கரோல்லா அல்டிஸ் காரில் இடம்பெற்றுள்ள என்ஜின் ஆப்ஷனில் எவ்விதமான…

Read More

2017 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு வந்துள்ள வைரத்துகள்களால் பெயின்ட் செய்யப்பட்ட சிறப்பு ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் டைமண்ட் ஸ்டார்டஸ்ட் என அழைக்கப்படுகின்ற இந்த காரை பிரத்யேக வாடிக்கையாளரின் விருப்பத்தின் பெயரில் ரோல்ஸ்-ராய்ஸ் வடிவமைத்துள்ளது. ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் எலகென்ஸ் மாடல் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக விளங்கினாலும் அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் ரோல்ஸ்-ராஸ் குட்வுட் ஆலையின் கைதேர்ந்த பெயின்ட் கலைஞர்களை கொண்டு 1000 வைரகற்களை துகள்களாக்கி அதனை பெயின்ட் உடன் இணைந்து சிறப்பு மாடலாக கோஸ்ட் எலகென்ஸ் கார் வந்துள்ளது. சிறிய துகள்களாக அறைக்கப்பட்டவைரங்களை கொண்டு பெயின் செய்யப்பட்டுள்ள இந்த காரின் பெயின்டிங் வேலைபாடுகளுக்கு மட்டும் 2 மாதங்கள் தேவைப்பட்டதாம். மேலும் பல்வேறு ஒளிகளில் எவ்வாறு தெரிகின்றது என்பதனை ஆய்வு செய்ய மைக்ரோஸ்கோப் கருவியுடன் இரு நாட்கள் ஆய்வு மேற்கொண்டனராம். இன்டிரியரிலும் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு காரின் சாதரன மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 5.50…

Read More

வருகின்ற ஏப்ரல் 1 முதல் கட்டாயமாகின்ற பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப என்ஜினை மேம்படுத்தியுள்ளதால் ரூ.3000-ரூ.4000 வரை ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலை உயர்வினை பெற்றுள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்குகள் பெரும்பாலான மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்கள் தங்களுடைய மாடல்களை பிஎஸ் 4 விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றி வருகின்றன நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனர் தங்களுடைய அனைத்து பைக்குகளூயும் பிஎஸ் 4 மாசு விதிகளுக்கு ஏற்ற என்ஜினாக கொண்டு வந்துள்ளது. பிஎஸ் 4 மாற்றத்துடன் கூடுதலாக ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியையும் பெற்று விளங்குகின்றது, பெற்றுள்ள இந்த புல்லட்களின் விலை சராசரியாக ரூ.3000 முதல் ரூ. 4000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியாக வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்து வரும் ராய்ல் என்ஃபீல்டு பைக்குகள் கடந்த சில மாதஙாகளாக விற்பனையில் முதல் 10 பைக்குகளின் பட்டியலில் இடம்பெற்று வருவதுடன் பஜாஜ் பல்சர் வரிசையை பின்னுக்கு தள்ளியுள்ளது.…

Read More

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் சூப்பர் ஸ்போர்ட்டிவ் கார் மாடல் ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. 789 hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 812 சூப்பர்ஃபாஸ்ட் காரில் சிறப்பு சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் 70 ஆண்டுகள் நிறைவை ஒட்டி சிறப்பு வண்ணமாக வெளியிடப்பட்டுள்ள சிவப்பு நிறத்தை ரோஸா 70 அனி (Rosso 70 Anni) என  ஃபெராரி குறிப்பிட்டுள்ளது. இந்த காரில் இடம்பெற்றுள்ள சக்திவாய்ந்த 6.5 லிட்டர் என்ஜின் அதிகபட்சமாக  789 HP பவர் மற்றும் 718 Nm டார்கினை வெளிப்படுத்துகின்றது. பவரை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.9 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளுகின்ற 812 சூப்பர்ஃபாஸ்ட் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 340 கிமீ ஆகும். மேலும் முதன்முறையாக ஃபெராரி காரில் எலக்ட்ரானிக்  பவர் ஸ்டீயரியங் சேர்க்கப்பட்டுள்ள இந்த…

Read More

கடந்த பிப்ரவரி 2017 மாதந்திர முடிவில் விற்பனையில் டாப் 10 கார்கள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.  மாருதி நிறுவனத்தின் ஆல்ட்டோ முதலிடத்தில் இருந்தாலும் ஸ்விஃப்ட் காரை வீழ்த்தி ஹூண்டாய் கிராண்ட் ஐ10 4வது இடத்தை கைபற்றியுள்ளது.  விற்பனையில் டாப் 10 கார்கள் கடந்த பிப்ரவரி மாத முடிவில் பெரும்பாலான முன்னணி கார்களின் விற்பனை சற்று சரிவிலே காணப்படுகின்றது. குறிப்பாக மாருதி நிறுவனத்தின் ஆல்ட்டோ , டிசையர் , ஸ்விஃப்ட் போன்றவை ஆகும். புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் சர்வதேச அளவில் பல நாடுகளில் விற்பனைக்கு சென்று உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாத முடிவில் 4வது இடத்தை இழந்த ஸ்விஃப்ட் புதிய கிராண்ட் ஐ10 காரின் வரவினால் பின்தங்கி உள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும்மாடல்களில் ஒன்றான ஆல்டோ கார் மாதந்தோறும் சராசரியாக 20,000 கார்களை கடக்கும் நிலையில் இருந்த வந்த ஆல்ட்டோ 19,524 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. ஆல்ட்டோ…

Read More