கடந்ந 2005 ம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்பட்டு வரும் நிசான் இந்தியா நிறுவனம் 106 நாடுகளுக்கு 7 லட்சம் வாகனங்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 7 லட்சம் வாகனங்களை எண்ணூர் துறைமுகத்தின் வாயிலாக ஏற்றுமதி செய்துள்ளது. நிசான் இந்தியா 2005 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சென்னை ஒரகடத்தில் அமைந்துள்ள ரெனோ-நிசான் கூட்டு ஆலையில் தயாரிக்கப்படுகின்ற இந்திய தயாரிப்பு நிசான் கார்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சென்னை எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகம் என அழைக்கப்படுகின்ற எண்ணூர் துறைமுகத்திலிருந்து 106 நாடுகளுக்கு நிசான் மற்றும் டட்சன் கார்களை ஏற்றுமதி செய்ப்படுகின்றது. முழுதாக வடிவமைக்கப்பட்ட கார்கள் தவிர 2500க்கு மேற்பட்ட உதிரிபாகங்களும் 18 நாடுகளில் அமைந்துள்ள 25க்கு மேற்பட்ட ரெனோ-நிசான் கூட்டு ஆலைகளுக்கு அனுப்படுவதாக டட்சன் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற டட்சன் ரெடி-கோ, கோ ,கோ பிளஸ் போன்றவற்றுடன் நிசான் சன்னி , மைக்ரா…
Author: MR.Durai
இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள ஜீப் காம்பாஸ் எஸ்யூவி காரின் 62 படங்கள் இணைப்பு. ஜீப் காம்பாஸ் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஆஃப்ரோடு அம்சங்களை கொண்ட எஸ்யூவி மாடலாக இருக்கும். காம்பாஸ் எஸ்யூவி கார் படங்கள் இணைக்கப்பட்டுள்ள எஸ்யூவி காரின் படங்களை பெரிதாக காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க… [foogallery id=”17019″]
ரூ.2.94 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ள ஹயோசங் அக்குய்லா 250 லிமிடேட் எடிசன் மாடலில் 100 மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. அக்குய்லா 250 மாடலில் 3 வண்ணங்கள் மட்டுமே கிடைக்க உள்ளது. ஹயோசங் அக்குய்லா 250 ஸ்பெஷல் எடிசனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹயோசங் அக்குய்லா 250 லிமிடேட் பதிப்பில் வண்ணங்களை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. இந்த பைக்கில் 26.57hp ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் 21.37Nm டார்க்கினை வழங்கும் வகையிலான 249சிசி என்ஜினை பெற்றுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் இடம்பெற்றுள்ள இந்த மாடலில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பெற்று பின்புறத்தில் ஹைட்ராலிக் டபுள் ஷாக் அப்சார்பார் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் முன்புற டிஸ்க் பிரேக் அமைப்பினை பெற்றிருப்பதுடன் பின்புறத்தில் டிரம் பிரேக்கினை பெற்று விளங்குகின்றது. அனைத்து டீலர்களிடமும் கிடைக்க உள்ள அக்குய்லா 250 லிமிடேட் எடிசன் சாதரன மாடலை விட ரூ.11,000 வரை கூடுதலான…
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 400சிசி என்ஜின் பொருத்தப்பட்ட டோமினார் 400பவர் க்ரூஸர் பைக்கினை நீல வண்ணத்தில் மிக நேர்த்தியாக நைட் ஆட்டோ கஸ்டமைஸர் மாற்றியமைத்துள்ளனர். பஜாஜ் டோமினார் பைக் விலை ரூ.1.38 லட்சம் ஆகும். டோமினார் 400 பைக் கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் 373சிசி இன்ஜினை குறைந்த பவரை வெளிப்படுத்தும் வகையில் டிட்யூன் செய்த 34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். என்ஜின் – 373cc பவர் – 34.5 bhp @ 8000rpm டார்க்: 35Nm @ 8500rpm கியர்பாக்ஸ் – 6 வேகம் எடை – 182 kg எரிபொருள்…
இந்தியாவின் முதன்மையான ஸ்போர்ட்டிவ் பைக் நிறுவனமாக விளங்கும் கேடிஎம் நிறுவனத்தின் கேடிஎம் ட்யூக் 250 பைக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான 5 விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கேடிஎம் 200 மற்றும் 390 ட்யூக் பைக்குகளுக்கு இடையில் மிகவும் சவலான விலையில் மோஜோ , பெனெல்லி டிஎன்டி 25 மற்றும் யமஹா FZ25 போன்ற பைக் மாடல்களுக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளது. 250 ட்யூக் பற்றி 5 முக்கிய தகவல்கள் 1. டிசைன் கேடிஎம் நிறுவனத்தின் சூப்பர் ட்யூக் பைக்கின் வடிவ அம்சங்களை அடிப்படையாக கொண்ட மிகவும் ஸ்டைலிசான தோற்ற அமைப்புடன் எல்இடி முகப்பு விளக்குடன் அமைந்துள்ளது. 2. இன்ஜின் 250 ட்யூக் பைக்கில் 30bhp பவரை வெளிப்படுத்தும் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 24 NM வெளிப்படுத்தும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் கூடிய 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ்…
ரூ.56.15 லட்சம் ஆரம்ப விலையில் லாங் வீல் பேஸ் கொண்ட 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸ் சொகுசு செடான் கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான சந்தை பங்களிப்பினை இ கிளாஸ் கார் பெற்று விளங்குகின்றது. 20 ஆண்டுகளுக்கு மேலாக 34,000 கார்களுக்கு மேல் விற்பனை ஆகியுள்ள இ கிளாஸ் காரில் முதன்முறையாக கூடுதல் வீல் பேஸ் கொண்ட long-wheelbase மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் நீளம் 5,063mm மற்றும் வீல்பேஸ் 3,079 மிமீ ஆகும். பென்ஸ் இ கிளாஸ் வசதிகள் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கின்ற புதிய பென்ஸ் இ கிளாஸ் காரில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் சிறப்பான இடவசதி போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது. பென்ஸ் இ கிளாஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள ஹை-டெக் எல்இடி முகப்பு விளக்கில் 84 LED விளக்குகளை பெற்றுள்ளது. பின்புறத்திலும் எல்இடிடெயில் விளக்குகள் , பனாமரிக் மேற்கூறை போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.…