டாடா கிராவிட்டாஸ்

வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கிராவிட்டாஸ் எஸ்யூவி உட்பட ஹெச்2எக்ஸ் மைக்ரோ எஸ்யூவி என மொத்தமாக 12 பயணிகள் வாகனங்களை காட்சிப்படத்த உள்ளது. இதில் இந்நிறுவனத்தின் பிஎஸ் 6 மாடல்களும் அடங்கும்.

விற்பனையில் கிடைக்கின்ற ஹாரியர் எஸ்யூவி அடிப்படையில் 7 இருக்கை பெற்ற எஸ்யூவி மாடலை க்ராவிட்டாஸ் என்ற பெயரில் டாடா வெளியிட உள்ளது. இந்த மாடலின் தோற்ற அமைப்பு ஹாரியர் போன்றே அமைந்திருப்பதுடன் முன்புறத்தில் சில ஸ்டைலிங் ட்விக்ஸ், பின்புறத்தில் மாறுபட்ட வடிவமைப்பை பெற்றிருக்கும்.

டாடாவின் கிராவிட்டாஸ் காரில் 2.0 லிட்டர் கிரையோடெக் டீசல் என்ஜின் மிகவும் சக்திவாய்ந்த, பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமானதாக பொருத்தப்பட்டிருக்கும். இது 170 ஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும். கிராவிடாஸிற்கான டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6 வேக மேனுவல் மற்றும் ஹூண்டாய் மூலமாக 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை அடங்கும்.

முதன்முறையாக இந்த மாடல் பஸ்ஸாரடு என்ற பெயரில் 2019 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியது. டாடா க்ராவிடாஸ் விலை ஹாரியரை விட ரூ.1 -1.50 லட்சம் அதிகமாக ரூ. 16 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்துவதனை தொடர்ந்து விற்பனைக்கு வெளியாகலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் CESS என்ற நோக்கத்தில் தனது கார்களை வெளியிட உள்ளது. CESS என்றால் Connected, Electric, Shared மற்றும் Safe ஆகும். 12 பயணிகள் வாகனம், 14 வர்த்தக வாகனங்கள் என மொத்தமாக 26 வாகனங்களை வெளியிட உள்ளது.