பவர்ஃபுல் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போவில் ரெனோ நிறுவனத்தின் டஸ்ட்டர் எஸ்யூவி காரில் கூடுதலான பவரை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 156 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

விற்பனையில் கிடைக்கின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலும் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட உள்ளது.மேலும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கைவிடப்பட உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் பல்வேறு நாடுகளில் ரெனால்ட் மற்றும் நிசான் கார்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

டஸ்ட்டர் டாப் வேரியண்ட் RXZ -ல் 17 அங்குல அலாய் வீல், எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப், ரிமோட் வழியாக கேபின் ப்ரீ-கூலிங் ஃபங்க்ஷன் மற்றும் ஆட்டோ ஏசி கட்டுப்பாட்டும் அடங்கும். இது க்ரூஸ் கட்டுப்பாடு, ஏபிஎஸ் உடன் இரட்டை முன் ஏர்பேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகியவற்றை பெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *