28,000க்கு அதிகமான ரெனால்ட் ட்ரைபர் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் ஏஎம்டி ஆப்ஷனை பெற்ற மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் ரெனோ நிறுவனம் காட்சிக்கு கொண்டு வந்துள்ளது. விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம்.
ட்ரைபர் காரில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக கிடைக்கின்றது. கூடுதலாக தற்போது ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் (Easy R-AMT) பெறுகின்றது.
ரெனால்டின் ட்ரைபரில் அடிப்படையாக அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட், டூயல் முன்பக்க ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உடன் இபிடி, பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், மற்றும் உயர் ரக மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா கொண்டதாக விளங்கும்.
சமீபத்தில் பிஎஸ்6 என்ஜின் பெற்ற ரெனால்ட் ட்ரைபர் கிடைக்கின்ற நிலையில் இந்த மாடலை விட ரூ.30,000 முதல் அதிகபட்சமாக ரூ.40,000 வரை விலை உயர்த்தப்பட்டு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள ரெனோ ட்ரைபர் பிஎஸ்6 மேனுவல் விலை விபரத்தின் படி…
RxE ரூ. 4.99 லட்சம்
RxL ரூ. 5.74 லட்சம்
RxS ரூ. 6.24 லட்சம்
RxZ ரூ. 6.78 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…