Automobile Tamil

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி இந்தியாவிற்க்கு அடுத்த வருடத்தின் மத்தியில் வரவுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான்
ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

பிரிமியம் ரக டிகுவான் எஸ்யூவி இந்திய சந்தைக்கு வரவுள்ளதால் பரவலாக எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் முந்தைய மாடலை விட வீல்பேஸ் 77மிமீ கூடியுள்ளது.

முந்தைய டிகுவான் எஸ்யூவி மாடலைவிட 50 கிலோ எடைகுறைவாகவும் , 60மிமீ நீளமும் , 30மிமீ அகலமும் மற்றும் 33மிமீ உயரம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் வீல்பேஸ் 77மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் காரின் உட்புறத்தில் இடவசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. கடைசி பின்புற இருக்கையின் இடைவெளி 29மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய பூட் ஸ்பேஸ் 145லிட்டர் கொள்ளளவு கொண்டாதாக இருந்தது. தற்பொழுது 615லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. பின்புற இருக்கைகளை மடக்கினால் மிக அதிகப்படியாக 1655 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக விரிவடைகின்றது.

இரண்டு விதமான டீசல் என்ஜின் ஆப்ஷனில் உள்ளது. 114பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் மற்றும் 148பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 4 விதமான ஆற்றல் வேறுபாடுகளில் 1.4 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் என இரண்டு விதமான ஆப்ஷனில் கிடைக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள டிகுவான் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். பாகங்களை தருவித்து ஒருங்கினைத்து விற்பனைக்கு வரலாம். முந்தைய தலைமுறை டிகுவான் காரை விட பன்மடங்கு தரம் , பாதுகாப்பு , தோற்றம் போன்றவற்றில் உயர்வு பெற்று விளங்குகின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் , செவர்லே ட்ரெயில்பிளேசர் , ஹோண்டா சிஆர்-வி , மிட்சுபிஷி பஜீரோ ஸ்போர்ட் ஹூண்டாய் சான்டா ஃபீ போன்ற எஸ்யூவிகளுடன் நேரடியாக டிகுவான் போட்டியை சந்திக்கும்.

New Volkswagen Tiguan SUV revealed

Exit mobile version