ஆடி இ டிரான் குவாட்ரோ கான்செப்ட் அறிமுகம்

ஆடி இ டிரான் குவாட்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி இ டிரான் குவாட்ரோ ஸ்போர்ட் எஸ்யூவி 2018ம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆடி இ டிரான் குவாட்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி
ஆடி இ டிரான் குவாட்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி

ஆடி இ டிரான் குவாட்ரோ எலக்ட்ரிக் கார் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் அதிக சொகுசு தன்மை போன்றவற்றை பெற்று விளங்கும். மேலும் இதில் மூன்று எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

மூன்று மோட்டார்களில் முன் சக்கரங்களை இயக்க ஒரு மோட்டாரும் , பின்புற சக்கரங்களை இயக்க இரண்டு மோட்டாரும் செயல்படும் இதன் மூலம் 320kw ஆற்றல் கிடைக்கும். இதன் முறுக்குவிசை 800NM ஆகும்.

0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.2விநாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆடி இ டிரான் குவாட்ரோ காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 210கிமீ ஆக எலக்ட்ரானிக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய லித்தியம் ஐன் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இந்த பேட்டர் சார்ஜ் ஏற ஏசி மற்றும் டிசி என இரண்டிலும் சார்ஜ் ஏறும் . மேலும் வயர்லெஸ் சார்ஜிங் நுட்பத்துடனும் வரவாய்ப்புகள் உள்ளது.

இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏறுவதற்க்கு 50 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். முழு சார்ஜில் சுமார் 500கிமீ வரை பயணிக்க முடியும். 

முதன்முறையாக ஆடி E-டிரான் காரில் மூன்று மோட்டார்கள் பொருத்தப்பட்ட லேஅவுட் பயன்படுத்தப்பட உள்ளது. மிக சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டிருக்கும் என்பதனால் வேக இழப்பினை பெருமளவு தடுக்க இயலும்.

மேட்ரிக்ஸ் லேசர் நுட்பத்தில் இயங்கும் விளக்குகளை பெற்றிருகும். 4 இருக்கைகளுடன் மிக சிறப்பான இடவசதி மற்றும் சொகுசு தன்மையுன் விளங்கும் காராக இருக்கும் . இதன் பூட் ஸ்பேஸ் 615 லிட்டர் கொள்ளளவு வரை இருக்கலாம்.

ஆடி இ டிரான் குவாட்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி 2018ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஆடி இ டிரான் குவாட்ரோ கான்செப்ட் படங்கள்

2018 Audi e-Tron Quattro concept unveiled

Exit mobile version