2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள செவர்லே பீட் ஏக்டிவ் க்ராஸ்ஓவர்ரக மாடல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோ 2016 (LA Auto Show 2016) அரங்கில் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிக்கு வந்த செவர்லே பீட் ஏக்டிவ் கான்செப்ட் மாடலின் உற்பத்தி நிலையை எட்டியுள்ளதால் இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வருவது உறுதி ஆகியுள்ளது.இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு செல்ல உள்ளது.
பீட் ஏக்டிவ் மாடலில் எல்இடி முகப்பு விளக்குகள் , பனி விளக்குகள் , பாரம்பரிய கிரில் போன்றவற்றுடன் க்ராஸ்ஓவர் மாடல்களுக்கான பாடி கிளாடிங் மற்றும் ஸ்போர்ட்டிவ் அலாய் வீல் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது. பின்புறத்திலும் எல்இடி டெயில் விளக்குகள் பெற்றுள்ளது.
உட்புறத்தில் 7 இஞ்ச் மைலிங் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் , இரட்டை வண்ண டேஸ்போர்டு , ஸ்போர்ட்டிவான இருக்கைகள் போன்றவற்றை கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.
விற்பனைக்கு வரும் பொழுது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களை பெற்ற மாடலாக விளங்கும். செவர்லே பீட் ஏக்டிவ் போட்டியாளர்கள் மஹிந்திரா கேயூவி100 மற்றும் வரவுள்ள மாருதி இக்னிஸ் போன்றவை ஆகும். அமெரிக்காவில் செவர்லே ஸ்பார்க் ஏக்டிவ் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…