Close Menu
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) Instagram YouTube
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) YouTube Instagram
Subscribe
Automobile Tamilan
Home»Auto Show
Auto Show

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2016

By MR.Durai
Facebook Twitter WhatsApp Telegram
Share
Facebook Twitter WhatsApp Telegram

2016 டெல்லி வாகன கண்காட்சியில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் ரூ. 1.11 கோடி விலையில் சச்சின் டெண்டுல்கர் விற்பனைக்கு அறிமுகம் செய்தார். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் பேஸ் ரக வேரியண்ட் சென்னை ஆலையில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

கடந்த 2015 பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட 7 சீரிஸ் சொகுசு கார் இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு வந்துள்ளது. கார்பன் கோர் தொழிநுட்பத்தினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதிய 7 சீரீஸ் கார் முந்தைய மாடலை விட 130கிலோ எடை குறைக்கப்பட்டிருந்தாலும் உறுதிமிக்க ஸ்டீல் , அலுமிணியம் மற்றும் கார்பன் ஃபைபர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 730Ld மாடலில் 261 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர் கொண்ட 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 620 Nm ஆகும். பிஎம்டபிள்யூ 750Li  மாடலில்  444 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர் கொண்ட 4.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 650 Nm ஆகும். இரண்டிலும் 8 வேக ஆட்டோ மேட்டிக் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

கம்ஃபோர்ட் , ஈக்கோ -புரோ , ஸ்போர்ட் மற்றும் புதிய அடாப்டிவ் மோட்  என 4 விதமான டிரைவ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் விலை பட்டியல்

BMW 730Ld Design Pure Excellence                 :       Rs. 1,11,00,000
BMW 730Ld M Sport                                        :       Rs. 1,19,00,000
BMW 730Ld Design Pure Excellence (CBU)       :       Rs. 1,40,00,000
BMW 750Li Design Pure Excellence (CBU)        :       Rs. 1,50,00,000
BMW 750Li M Sport (CBU)                               :       Rs. 1,55,00,000

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

 

BMW
Follow on Google News
Share. Facebook WhatsApp Twitter Telegram Pinterest
Previous Articleஃபோர்டு மஸ்டாங் GT காட்சிப்படுத்தபட்டது – ஆட்டோ எக்ஸ்போ 2016
Next Article ஜீப் கிராண்ட் செரோக்கீ SRT அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

Related Posts

carens clavis price

விரைவில் டாக்சி சந்தைக்கு ஏற்ற கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி அறிமுகமாகிறது

இந்தியாவில் ரூ.74.99 லட்சத்தில் எம்ஜி சைபர்ஸ்டெர் வெளியானது

Facebook X (Twitter) YouTube Instagram Pinterest
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
© 2025 Automobile Tamilan.

Type above and press Enter to search. Press Esc to cancel.