Site icon Automobile Tamilan

மெர்சிடிஸ்-பென்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் வருகை

சொகுசு கார் தயாரிப்பில் பிரசத்தி பெற்ற மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் காரை வருகின்ற அக்டோபரில் நடைபெறவுள்ள 2016 பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலாக காட்சிக்கு வரவுள்ள கான்செப்ட் உற்பத்தி நிலைக்கு 2019 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வரும் மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி காரின் MRA பிளாட்பாரத்திலே வடிவமைக்கப்பட உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் எவ்விதமான மாசு உமிழ்வினை ஏற்படுத்தாத ஜீரோ எமிஷன் காராக விளங்கும்.

பெரும்பாலான முன்னனி கார் தயாரிப்பாளர்கள் புதைபடிவ எரிபொருட்களான பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார்களை வடிவமைக்க தொடங்கி உள்ளன. அடுத்த சில வருடங்களில் உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்களின் ஆதிக்கம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாகவும்  ,ஜாகுவார் ஆடி போன்ற நிறுவனங்களும் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் தயாரிப்பில் களமிறங்கிய வரிசையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

Exit mobile version