Site icon Automobile Tamilan

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி அறிமுகம்

ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் சர்வதேச அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தின் இறுதியில் இந்தியாவில் ஸ்கோடா கோடியக் எஸ்யூவி கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

 

ஸ்கோடா எட்டி எஸ்யூவி காருக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள 7 இருக்கைகளை கொண்ட ஸ்கோடா கோடியாக் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாடலாகும்.

டிசைன்

கோடியாக் காரின் அளவுகள் 4,697 மில்லிமீட்டர் நீளமும், 1,882 மில்லிமீட்டர் அகலமும், 1,676 மில்லிமீட்டர் உயரமும் ,  2,791 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. மேலும் இதன் கிரவுண்ட் கிளியரண்ஸ் 190 மில்லிமீட்டர் மற்றும் 300 மில்லிமீட்டர் உயரம் வரை உள்ள நீரான இடங்களில் பயணிக்க ஏதுவாக இருக்கும்.

மிக நேர்த்தியான  முப்பரிமான ரேடியேட்டர் கிரில் , அழகான ஹெட்லைட் விளக்குகளுடன் கூடிய பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் மற்றும் எல்இடி பனி விளக்குகள் என அனைத்து விளக்குகளும் எல்இடியை பெற்றுள்ளது. எல்இடி டெயில் விளக்குகள் , 20 இன்ச் அலாய் வீல் , நேர்த்தியான பக்கவாட்டு புராஃபைல் கோடுகள் என மிக நேர்த்தியான அமைந்துள்ளது.

உட்புறத்தில் டேஸ்போர்டு  சிறப்பான ஃபீனிஷ் செய்யப்பட்டு சென்ட்ரல் கன்சோலில் ஸ்கோடா கனெக்ட் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஸ்கோடா கனெக்ட் டெக்னாலஜி வாயிலாக வை-ஃபை , கூகுள் எர்த் , 360 டிகிரி கேமரா , ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஆப்பிள் கார்பிளே , எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் அழைப்புகள் , ஆம்பியன்ட் லைட்டிங் குடைகள் கதவுகளில் மேலும் பல.. என எண்ணற்ற நவீன அம்சங்களை கொண்டதாக கோடியாக விளங்குகின்றது.

7 இருக்கை மாடலாக கிடைக்கின்ற இந்த காரில் பின்புறத்தில் உள்ள பூட் இடவசதி 270 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும் , பின்புற மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால் 720 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும் இரண்டாவது வரிசை இருக்கையை மடக்கினால்  2,065 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக விரிவடைகின்றது.

 

கோடியாக் எஞ்சின்

சர்வதேச அளவில் கோடியாக் எஸ்யூவி காரில் 1.4 லிட்டர் TSI  2.0 லிட்டர் TSI மற்றும் 2.0 லிட்டர் TDI என மூன்று விதமான எஞ்சின்களுடன் 5 விதமான பவர் மாறுதல்களில் கிடைக்க உள்ளது.

1.4 லிட்டர் TSI பெட்ரோல் இஞ்ஜினில் 125hp  மற்றும் 155hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும்.

2.0 லிட்டர் டிஎஸ்ஐ இஞ்ஜின் 180hp பவரை வெளிப்படுத்தும்.

2.0 லிட்டர் TDI டீசல் இஞ்ஜின் 150hp மற்றும் 190hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும்.

அனைத்து கோடியாக் எஞ்சின்களிலும் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீட் DSG ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும். மேலும் பேஸ் 125hp வேரியண்ட் மாடலை தவிர மற்றவற்றில் ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.

 

வருகின்ற ஆக்டோபர் மாதம் தொடங்க உள்ள 2016 பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வரவுள்ள ஸ்கோடா கோடியாக் அதனை தொடர்ந்து உற்பத்திக்கு செல்ல உள்ளது. 2017 ஆம் ஆண்டின் தொடக்கம் ஐரோப்பாவிலும் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டின் இறுதியில் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ரூபாய் 25 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான விலைக்குள் மிக சவலான மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் படங்கள்

[foogallery id=”9754″]

Exit mobile version