Automobile Tamil

2016 மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி அறிமுகம்

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் நியூயார்க் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மிட்சுபிஷி அவுட்லேண்டர்

அழகான புதிய முகப்பு தோற்றம் , சில தொழில்நுட்ப மாற்றங்களுடன்  நவீன வசதிகள் இணைக்கப்பட்டு அவுட்லேண்டர் எஸ்யூவி பார்வைக்கு வந்துள்ளது.

தோற்றம்

முகப்பு தோற்றம் முற்றிலும் அழகான தோற்றத்தில் ஏரோடைனமிக்ஸ் அடிப்படையில் இரண்டு குரோம் பூச்சூ ஸ்லாட்களுக்கு மத்தியில் மிட்சுபிஷி  இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது. முகப்பு பம்பர் மற்றும் பனி விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. எல்இடி முகப்பு விளக்குகள் பின்புறத்திலும் எல்இடி நிறுத்த விளக்குகள் பயன்படுத்தியுள்ளனர்.

பக்கவாட்டு தோற்றம் மேம்படுத்தியுள்ளனர். 18 இஞ்ச் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்திலும் புதுப்பிக்கப்பட்ட பம்பர் லைசன்ஸ் பிளேட்டுக்கு மேல் குரோம் பூச்சு சேர்க்கப்படுள்ளது.

உட்ப்புறம்

7 இருக்கைகள் கொண்ட அவுட்லேண்டர் காரின் உட்ப்புறத்தில் புதிய தொடுதிரை இன்ஃபோன்டெயின்மென்ட் , புதிய ஸ்டீயரீங் வீல் , அப்ல்சரி , பின்புற இருக்கைகள் ஃபோல்டிங் வசதி போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.

மெக்கானிக்கல் மாற்றங்கள்

2016 மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி காரில் அடிசட்டம் மற்றும் பாடியின் கட்டுமானம் புதுப்பிக்கப்பட்டுள்ளதால் வாகனத்தின் நிலைப்பு தன்மை அதிகரித்துள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பு முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் பயன்படுத்தியுள்ளனர்.

என்ஜின்

2.4 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் பெட்ரோல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனில் அவுட்லேண்டர் எஸ்யூவி கிடைக்கும். என்ஜினில் பெரிதான மாற்றங்கள் இல்லை ஆனால் சிவிடி கியர்பாக்சில் சிறப்பான செயல்திறன் மற்றும் முறுக்குவிசையை கொண்டு செல்லும் வகையில் மேம்படுத்தியுள்ளனர்.
2.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 166எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதே என்ஜின் வகையில் இந்தியாவில் கிடைக்கும். மேலும் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 224எச்பி ஆற்றலை தரும்.
இந்தியா வருமா ?
புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ ரூ.23 லட்சம் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version