Automobile Tamilan

2016 ஹோண்டா பைக்குகள் அறிமுகம் – EICMA 2015

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் EICMA 2015 மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் சிட்டி அட்வென்ச்சர் கான்செப்ட் , CRF 1000L ஆப்பரிக்கா ட்வீன் , CB500F , CBR500R , CB500X போன்ற ஹோண்டா பைக்குகள் காட்சிக்கு வந்துள்ளது.
ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் பைக்
ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர்

ஹோண்டா CB500F

புதிய ஹோண்டா CB500F ஸ்டீரிட் ஃபைட்டர் பைக்கில் தோற்றம் மற்றும் ஸ்டைலிங்குடன் டிரான்ஸ்மிஷன் , சஸ்பென்ஷன் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சிபி500எஃப் மாடலில் சிபிஆர்500ஆர் பைக்கின் ஸ்டைலிங் தாத்பரியங்களை பெற்றுள்ளது. 47 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 471சிசி ட்வின் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 500சிசி பிரிவு பைக்குகளான CBR500R , CB500X போன்ற மாடல்களும் EICMA 2015 மோட்டார்பைக் கண்காட்சியில் பார்வைக்கு வந்துள்ளது.

ஹோண்டா சிட்டி  அட்வென்ச்சர் கான்செப்ட்

புதிய சிட்டி அட்வென்ச்சர் பைக் கான்செப்டில் ஆஃப்ரோடு அனுபவத்தினை தரவல்ல இருசக்கர வாகன கான்செப்ட்டை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டா CRF 1000L ஆப்பரிக்கா ட்வீன்

முதன்முறையாக ஐரோப்பா ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள CRF 1000L ஆப்பரிக்கா ட்வீன் பைக் இந்த ஆண்டின் இறுதியில் ஐரோப்பா சந்தையில் விற்பனைக்கு செல்ல உள்ளது.

ஹோண்டா CRF 1000L ஆப்பரிக்கா ட்வீன் பைக்கில் புதிய 998சிசி பேரலல் ட்வீன் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. டூரிங் ரக ஆப்பரிக்கா ட்வீன் பைக்கில் சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தினை பெற இயலும்.  மேலும் இந்த பைக்கில் எல்இடி முகப்பு மற்றும் டெயில் விளக்குகள் , சுவிட்சபிள் ஏபிஎஸ் , டியூவல் கிளட்ச் போன்றவற்றை பெற்றிருக்கும்.

ஹோண்டா 750சிசி

ஹோண்டா NC750S  NC750X மற்றும் இன்ட்கிரா போன்ற கான்செப்ட்கள் மேம்படுத்தப்பட்ட நிலையில் EICMA 2015 கண்காட்சியில் பார்வைக்கு வந்துள்ளது. புதிய வண்ணங்கள் மற்றும் யூரோ4 மாசு கட்டுப்பாடு அளவுகளை பெற்றுள்ளது.

புதிய வண்ணங்கள்

VFR1200X Crosstourer , CB650F, CBR650F, CBR300R மற்றும் SH125i போன்ற மாடல்கள் புதிய வண்ணங்களை பெற்றுள்ளது

Honda City Adventure Concept, CRF1000L Africa Twin unveiled at EICMA 2015

Exit mobile version