2017 ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்டிபிள் அறிமுகம் – LA AUTO SHOW 2015

லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி காரின் கன்வெர்டிபிள் மாடல் LA AUTO SHOW 2015 யில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டின் இறுதியில் ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்டிபிள் விற்பனைக்கு வருகின்றது.
2017 ரேஞ்ச்ரோவர் எவோக்

உலகின் முதல் சொகுசு கன்வெர்டிபிள் எஸ்யூவி காரான ரேஞ்ச்ரோவர் எவோக் கார் மிகவும் பிரபலமான இவோக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலின் தோற்றத்தினை பெற்றுள்ளது.

மேற்கூரை இல்லாத ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி காரிலும் சாதரன மாடலில் உள்ள அதே என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 237 ஹெச்பி ஆற்றல் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 178 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 2.0 லிட்டர் இக்கினியம் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் நிரந்தரமாக இருக்கும்.

மேற்கூறை இல்லையென்றாலும் மிக சிறப்பான கட்டுமானத்தை பெற்றிருக்கும். மேற்கூரை 18 விநாடிகளில் மூடிக்கொள்ளும்.

2016ஆம் ஆண்டின் இறுதியில் சந்தைக்கு வரவுள்ள ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்டிபிள் எஸ்யூவி இந்தியாவிலும் விறுபனைக்கு வரவுள்ளது.

Exit mobile version