Site icon Automobile Tamilan

EICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400

கவாசாகி நிறுவனம் தனது புதிய கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்களில், நிஞ்சா 400-களில் இருந்து பெற்ற மெக்கனிக்கல் ஹார்ட்வேர்களை கொண்டிருக்கிறது.

கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்கள் டியுபிளர் ஸ்டீல் பிரேம்களுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் இன்ஸ்டுரூமென்ட்களுடன் முழுவதும் டிஜிட்டல் கிளச்சர் மற்றும் கவர்ந்திழுக்கும் LED ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களின் சீட் 785mm மற்றும் கிராப் வெயிட் 167kg ஆக இருக்கும்.

சஸ்பென்சன் மற்றும் பிரேக்கிங் போன்றவற்றை பொறுத்தவரை இந்த கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்கள் நிஞ்சா 400 மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெறப்பட்டதாகவே உள்ளது. மேலும் இதில் கன்வென்சனல் டெலிஸ்கோப் பிராண்ட் போர்க் மற்றும் ரியர் மோனோஷாக் கொண்டிருக்கும். இந்த மோட்டார் சைக்கிள்களின் முன்புறத்தில் 310mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் போலோட்டிங் ரியர் பிரேக் கள் பொருத்தப்பட்டுள்ளது மேலும் இதில் டூயல் சேனல் ABS வழக்கம் போலவே இடம் பெற்றுள்ளது.

கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்கள் 399cc, லிக்யுட்-கூல்டு, பெர்லல்-டூவின் இன்ஜின்களுடன் 49PS ஆற்றலுடன் 38Nm டார்க்யூகளை கொண்டிருக்கும். இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன்களுடன் சிலிப்பர் கிளட்ச் இடம் பெற்றுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டதால், KTM டியூக் 390, பென்னெலி டிஎன்டி 300 மற்றும் BMW G 310 ஆர் மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும்.

Exit mobile version