இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் GIIAS மோட்டார் ஷோவில் ஹோண்டா X-ADV 150 ஸ்கூட்டர் எனப்படுகின்ற அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டர் மாடல் X-ADV 745சிசி மாடலை அடிப்படை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ற மாடலாக கெய்கிண்டோ இந்தோனேசியா சர்வதேச ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஹோண்டா எக்ஸ்-அட்வ் 150 மாடல் மிக ஸ்டைலிஷான மற்றும் முரட்டு தன்மையை வெளிப்படுத்தும் அட்வென்ச்சர் ரக மாடலாக விளங்குகின்றது.
இந்த அட்வென்ச்சர் ரக மாடலில் 149.3சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 14.2 bhp பவர் மற்றும் 13.8 Nm டார்க் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் வி-மேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின்-கேஸ் சார்ஜ் ஷோவா ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் திறனில் சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் உடன் கூடிய முன்புறம் 240 மிமீ பெட்டல் டிஸ்க், பின்புறம் 220 மிமீ டிஸ்க் வழங்கப்படுகிறது.