கியா ஸ்டோனிக் எஸ்யூவி படங்கள் வெளியீடு..!

ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமான கியா மோட்டார்ஸ் புதிய கியா ஸ்டோனிக் எஸ்யூவி மாடலின் டிசைன் வரைபடங்களை வெளியிட்டுள்ளது. கியா ஸ்டானிக் எஸ்யூவி க்ராஸ்ஓவர் சர்வதேச அளவில் விற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ளதால் இந்திய சந்தைக்கும் வரும் வாய்ப்புகள் உள்ளது.

கியா ஸ்டோனிக் எஸ்யூவி

இந்த ஸ்டோனிக் எஸ்யூவி சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் டீஸர் வெளியிட்ட கோனா எஸ்யூவி காரின் அதே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகின்ற செப்டம்பரில் நடைபெற உள்ள பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ கண்காட்சியில் காட்சிக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஸ்டோனிக் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் அடுத்த ஆண்டின் தொடக்கம் முதல் விற்பனைக்கு கிடைக்கலாம்.

தோற்ற அமைப்பில் கியா நிறுவனத்தின் பாரம்பரிய புலி மூக்கினை போன்ற கிரில் அமைப்புடன் கூடிய மிக நேர்த்தியான ஹெட்லேம்ப் பெற்று செங்குத்தான பனிவிளக்குஅமைப்புடன் கூடிய தேன்கூடு அமைப்பிலான பம்பர் கிரில் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் தட்டையான எல்இடி டெயில் விளக்குகள்,ஸ்டைலிசான பம்பர் அமைப்பு போன்றவற்றை பின்புற அமைப்பில் கொண்டுள்ளது. இன்டிரியரில் மிக நேர்த்தியான எளிமையான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் டிசைனுடன் கூடிய அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. எஞ்சின் குறித்தான விபரங்களை வெளியிடவில்லை.

விட்டாரா பிரெஸ்ஸா ,ஈக்கோஸ்போர்ட் வரவுள்ள நெக்ஸான் மற்றும் சோதனை ஓட்டத்தில் உள்ள மஹிந்திரா டிவோலி அடிப்படையிலான எஸ்யூவி கார் போன்றவற்றுக்கு சவாலாக இந்த கியா மாடல் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version