Automobile Tamilan

டாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்

b2778 tata h2x micro suv concept

இன்றைக்கு முதல்முறையாக டாடா H2X எஸ்யூவி அறிமுகம் ஜெனீவா மோட்டார் ஷோவில் செய்யப்பட்டுள்ள நிலையில் உற்பத்தி நிலை மாடல் டாடா ஹார்ன்பில் என பெயரிடப்பட்டு 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த எஸ்யூவி மஹிந்திரா கேயூவி100 மற்றும் வரவுள்ள மாருதி ஃப்யூச்சர் எஸ், மற்றும் ஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி ஆகியவற்றுக்கு போட்டியாக விற்பனைக்கு வரலாம்.

2019 ஜெனீவா மோட்டார் ஷோ அரங்கில் வெளியிடப்பட்டுள்ள டாடா மோட்டார்சின் அல்ட்ரோஸ், அல்ட்ரோஸ் EV மற்றும் H7X எஸ்யூவியை அடிப்படையாக கொண்ட 7 சீட்டர்களை பெற்ற டாடா பஸார்ட் எஸ்யூவி மாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

டாடா H2X மைக்ரோ எஸ்யூவி காரின் சிறப்புகள்

2020 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள டாடா H2X எஸ்யூவி மாடல் இந்திய சந்தையில் கிடைக்கின்ற மஹிந்திரா கேயூவி100 காருக்கு போட்டியாகவும், மாருதி வெளியிட திட்டமிட்டுள்ள  Future S கான்செப்ட் மற்றும் ஹூண்டாயின் மைக்ரோ எஸ்யூவி ரக மாடலுக்கும் போட்டியாக விளங்க உள்ளது.

H5X கான்செப்ட் என அறியப்பட்டு பின்பு விற்பனைக்கு வந்த டாடா ஹாரியர் எஸ்யூவி தோற்ற வடிவமைப்பினை பின்பற்றி அதன் சிறிய ரக மாடலாக வெளியாகும் வாய்ப்புகள் உள்ள ஹெச்2எக்ஸ் காரில் டாடாவின் இம்பேகட் டிசைன் 2.0 மொழி பயன்படுத்தப்பட்டு டாடாவின் ஆல்ஃபா பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இன்டிரியர் அமைப்பில் அல்ட்ரோஸ் காரின் அம்சங்களை பெற்றதாக வரவுள்ள ஹெச்2எக்ஸ் கான்செப்டில் 1.05 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்படலாம். இந்த காரின் உற்பத்தி நிலை பெயர் டாடா ஹார்ன்பில் எஸ்யூவி என அழைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. உற்பத்தி நிலை மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வரக்கூடும்.

Exit mobile version