ஸ்கூட்டர் சந்தையில் பிரசத்தி பெற்ற மாடல்களில் ஒன்றான சுசுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் பிரத்தியேக மேட் பிளாக் மற்றும் கிரே நிறம் என இரு நிறங்களில்  ரூ.62,174 விலையில் வெளியாகியுள்ளது.

 

 சுசூகி ஆக்செஸ் 125 மேட் ஸ்பெஷல் எடிசன்

சில வாரங்களுக்கு முன்னதாக சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டரில் இரு வண்ண கலவை மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து 125சிசி சந்தையில் சிறந்து விளங்குகின்ற மாடல்களில் ஒன்றான ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் தற்போது சிறப்பு மேட் நிறத்திலான எடிசன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

தோற்ற அமைப்பு மற்றும் எஞ்சின் ஆற்றல் உள்ளிட்ட எந்த வசதிகளும் மாற்றப்படாமல் நிறத்தை மட்டுமே கூடுதலாக இணைத்துள்ளது.லிட்டருக்கு 64 கிமீ மைலேஜ் தரும் வகையிலான சுசுகி இக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை கொண்ட 7000 ஆர்பிஎம் சுழற்சியில் 8.7 hp ஆற்றல் மற்றும்  5000 ஆர்பிஎம் சுழற்சியில் 10.2Nm டார்க் வழங்கும் 124சிசி ஏர்-கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சினை பெற்றுள்ளது.

ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன், மொபைல் சார்ஜிங் சாக்கெட், இருக்கை அடியில் 21 லிட்டர் கொள்ளளவு பெற்ற ஸ்டோரேஜ் போன்றவற்றுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆக்செஸ் 125 சிறப்பு பதிப்பில் மொத்தம் மூன்று நிறங்கள் கிடைக்க உள்ளன. அவை மெட்டாலிக் கிரே, மேட் பிளாக் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களாகும்.

தமிழகத்தில் சுசுகி ஆக்செஸ் 125 மேட் ஸ்பெஷல் எடிசன் விலை ரூ. 62,174 (எக்ஸ்-ஷோரூம்)