அவென்ஜர் ஸ்டீரிட் 150 , அவென்ஜர் ஸ்டீரிட் 220 என இரு பைக்குகளும் தலா ஒரு புதிய நிறங்களை பெற்றுள்ளது. பஜாஜ் அ வென்ஜர் ஸ்டீரிட் 150 பைக்கில் சிவப்பு நிறத்திலும் மற்றும் பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 220 பைக்கில் மேட் பச்சை நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னதாக அவென்ஜர் 220 க்ரூஸ் பைக்கில் புதிய டெஸ்ர்ட் கோல்டு வண்ணம் இனைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஸ்டீரிட் வரிசை பைக்குகளில் இரு வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அவென்ஜர் ஸ்டீரிட் 150 பைக்கில் மிட்நைட் பூளூ மற்றும் காஸ்மிக் ரெட் வண்ணங்கள் உள்ளது. அவென்ஜர் ஸ்டீரிட் 150 பைக்கில் மேட் பிளாக் மற்றும் மேட் வைல்ட் கிரீன் வண்ணங்கள் உள்ளது. அவென்ஜர் க்ரூஸ் 220 பைக்கில் டிவைன் பிளாக் மற்றும் டெஸ்ர்ட் கோல்டு நிறங்கள் உள்ளது.
அவென்ஜர் 220 க்ரூஸ் மற்றும் 220 ஸ்டீரிட் க்ரூஸர் பைக்கில் 19.03 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 220சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 17.5 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
150 ஸ்டீரிட் பைக்கில் 14.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.5 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
பஜாஜ் அவென்ஜர் பைக் விலை
அவென்ஜர் 220 க்ரூஸ் – ரூ.87,405
அவென்ஜர் 220 ஸ்டீரிட் – ரூ.87,405
அவென்ஜர் 150 ஸ்டீரிட் – ரூ.77,230
(தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம்)