அடுத்த சில வாரத்துக்குள் வெளியாக உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் , 2019 பஜாஜ் டாமினார் 400 பைக் படங்கள், மற்றும் விபரங்கள் அந்நிறுவனத்தின் புதிய ‘ Bajaj – The World’s Favourite Indian’ பிராண்டு கோஷ அறிமுக விழாவில் வெளியாகியது
பஜாஜ் டாமினார் 400 பைக்
சமீபத்தில் நடைபெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முக்கிய நிகழ்வான பிராண்டு அடையாளத்தை வெளிப்படுதும் நிகழ்வில் 70 நாடுகளில் பஜாஜ் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்துக்கான புதிய கோஷம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
உலகின் விருப்பமான இந்தியன் என்ற கோஷத்தை குறிக்கும் வகையிலான வீடியோ ஒன்றில் புதிய டாமினார் 400 பைக் விபரங்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு ஸ்பை படங்கள் மற்றும் முக்கிய விபரங்கள் முன்பே வெளியாகியிருந்த நிலையில், அதனை உறுதிப்படும் வகையில் புதிய டாமினார் 400 பைக்கில் கேடிஎம் மாடலில் இடம்பெற்றுள்ளதை போன்ற முன்புற யூஎஸ்டி ஃபோர்க்கு மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டிருக்கின்றது.
புதுப்பிக்கப்பட்டு வரவுள்ள டாமினாரில் நவீன வசதியை பெற்ற டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், இரண்டாவது கிளஸ்ட்டராக எரிபொருள் கலனில் இணைக்கப்பட்டுள்ள கிளஸ்ட்டரில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர் டிரிப்மீட்டர், கடிகாரம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும்.
டோமினார் 400 பைக்கில் இடம்பெற்றுள்ள 373 சிசி என்ஜின் சில மாற்றங்களை பெற்றிருக்கும். குறிப்பாக மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் அதிகப்படியான அதிர்வுகள் குறைக்கப்பட்டு சீரான டார்க் அனுபவத்தை வழங்கும் என்பதனால் என்ஜின் மாற்றம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் 34 பிஎச்பி பவர் மற்றும் 35 என்எம் டார்க் ஆகியவற்றில் மாற்றம் இருக்க வாய்ப்புகள் உள்ளது.
முன்பு உறுதிப்படுத்தியது போலவே இரு பிரிவை கொண்ட எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இதனால் மிக நேர்த்தியான எக்ஸ்ஹாஸ்ட் சப்தம் வெளியாகும். இந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் வாயிலாக பஜாஜின் டாமினார் 400 பைக்கிற்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ.10,000 அல்லது ரூ.5,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
புதிய டாமினார் 400 பிப்ரவரி இறுதி வாரத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. விற்பனையில் உள்ள டாமினார் 400 விலை ரூ.1.63 லட்சமாக உள்ளது. கூடுதல் அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் பெற்றுள்ள காரணத்தால் ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டு ரூ.1.77 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.