பஜாஜ் பல்சர் சிஎஸ்400 என அறியப்பட்ட பைக்கின் பெயர் பஜாஜ் பல்சர் விஎஸ்400 (Pulsar VS400) என்ற பெயரில் வெளிவருவதற்கான் வாய்ப்புகள் உள்ளதை நிருபீக்கும் வகையில் முக்கிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.
ஆட்டோமொபைல் வாகனங்களை அனுமதி அளிக்கும் ஆராய் அமைப்பின் சோதனை தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. இவற்றின் வாயிலாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அவற்றின் முக்கிய தகவலே பஜாஜ் பல்சர் சிஎஸ்400 என்பது பெயர் அல்ல பஜாஜ் பல்சர் விஎஸ் 400 என்பது தான் பெயராக அமைந்துள்ளதால் வி ரேஞ்ச் பைக் வரிசையில் இடம் பெறலாம்.
பல்சர் விஎஸ்400 எஞ்ஜின்
கடந்த ஜூலை 23ந் தேதி சோதனை செய்யப்பட்டுள்ள பைக்கில் பேஸ் மாடல் என்றே குறிப்படப்பட்டுள்ளது. பல்சர் விஎஸ்400 பைக்கில் 34.51 hp (25.74 KW) ஆற்றல் 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம். கேடிஎம் 390 டியூக் பைக்கை விட ஆற்றல் குறைவாகும். விஎஸ்400 பைக்கின் எடை 332 கிலோ என தெரிய வந்துள்ளது
வெளியாகியுள்ள படங்களில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குள் , பின்பக்கத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம் பெற்றுள்ளது. இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் டியூவல் சேனல் ஏபிஎஸ் இடம்பெற்றுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , எல்இடி டெயில் லைட் போன்ற வசதிகளுடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , பெட்ரோல் டேங்க் மேல் பகுதியில் டிஸ்பிளே , போன்றவை இடம்பெற்றிருக்கும்.
அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள பஜாஜ் பல்சர் VS400 பைக்கின் விலை ரூ. 1.80 லட்சத்தில் அமையலாம்.
தகவல் : maxabout.com