அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் பஜாஜ் பல்சர் விஎஸ்400 (சிஎஸ்400) பைக்கின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பல்சர் விஎஸ்400 பைக்கின் விளம்பர படப்படிப்பு லடாக் பள்ளதாக்கில் நடைபெற்றுள்ளது.
2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 என அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலின் உற்பத்தி நிலை மாடலுக்கு பஜாஜ் பல்சர் விஎஸ்400 என பெயரிட்டுள்ளது.
பல்சர் விஎஸ்400 பைக்கில் 34.51 hp (25.74 KW) ஆற்றல் 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம். விஎஸ்400 பைக்கின் எடை 332 கிலோ என தெரிய வந்துள்ளது.
கேடிஎம் டியூக் 390 பைக்கின் எஞ்ஜினை அடிப்படையாக கொண்ட எஞ்சினை பெற்றுள்ள விஎஸ்400 பைக்கின் ஆற்றல் டியூக் 390 பைக்கை விட குறைவான ஆற்றலை பெற்றுள்ளது. மிக சவாலான விலையில் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
டெலிஸ்கோபிக் ஃபோர்க்குள் , பின்பக்கத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம் பெற்றுள்ளது. இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் டியூவல் சேனல் ஏபிஎஸ் இடம்பெற்றுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , எல்இடி டெயில் லைட் போன்ற வசதிகளுடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , பெட்ரோல் டேங்க் மேல் பகுதியில் டிஸ்பிளே , போன்றவை இடம்பெற்றிருக்கும்.
சமீபத்தில் வெளியாகியுள்ள விளம்பர படங்களின் வாயிலாக ஆகஸ்ட் இறுதிக்குள் பைக் சந்தைக்கு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படங்கள் ; பேஸ்புக் binny.jacob.14