பெனெல்லி TNT600i பைக் சிறப்பு பதிப்பு அறிமுகம்

பெனெல்லி TNT600i சூப்பர் பைக்கின் சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பு ரூ.5.58 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. பெனெல்லி டிஎன்டி600ஐ தங்க நிற வண்ணத்தில் 60 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இத்தாலியின் பெனெல்லி அறிமுகம் செய்து சில மாதங்களிலே சிறப்பான விற்பனை இலக்கினை அடைந்து வருகின்றது.

ஸ்போர்டிவ் நேக்டு பைக்காக வந்துள்ள  பெனெல்லி TNT600i பைக்கில் 85 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 600சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 55என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

கோல்டன் வண்ணத்தில் கவர்ந்திழுக்கும் தோற்றத்தினை கொண்டுள்ள டிஎன்டி600ஐ பைக்கில் சிறப்பான ரைடிங் அனுபவத்தினை தரவல்லதாகும். நெடுந்தொலைவு பயணத்திற்க்கு ஏற்ற சொகுசு இருக்கைகளை பெற்றுள்ளது. சாதரன மாடலை விட வரையறுக்கப்பட்ட இந்த சிறப்பு பதிப்பின் விலை ரூ.20,000 கூடுதலாகும்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள சிறப்பு பதிப்பு பெனெல்லி TNT600i பைக் விலை ரூ.5.58 லட்சம் (எகஸ்ஷோரூம் புனே).

Benelli TNT 600i Limited edition launched in India

Share