ரூ.50,920 தொடக்க விலையில் மஹிந்திரா கஸ்டோ 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரில் இரு வேரியண்ட் மாடல்கள் வந்துள்ளது.

Mahindra-Gusto-125

8.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 124.6சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 10.5 Nm ஆகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.  கஸ்டோ போட்டியாளர்களாக சுசூகி ஆக்செஸ் 125 , ஆக்டிவா 125 போன்ற ஸ்கூட்டர்கள் விளங்குகின்றது.

இருசக்கரங்களிலும் 130மிமீ டிரம் பிரேக் , முன்சக்கரத்தில் டெலிஸ்கோபிக் ஏர் ஸ்பிரிங் , பின்சக்கரத்தில் காயில் ஹைட்ராலிக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. தோற்ற அமைப்பில் கஸ்டோ 110 ஸ்கூட்டரை தழுவி உள்ள 125 ஸ்கூட்டரில் இரு வண்ண கலவை முன்புற தோற்றம் போன்றவை வித்தியாசப்படுத்துகின்றது.

மேலும் படிக்க ; 2016 சுசூகி ஆக்செஸ் 125 விலை விபரம்

பேஸ் வேரியண்ட் DX மற்றும் VX டாப் வேரியண்டில் ஹாலஜன்  முகப்பு விளக்குகள் , எல்இடி குயிட் விளக்கு , ஃபீளிப் கீ , இருக்கை உயரத்தினை அட்ஜெஸ்ட் செய்ய்ம் வசதி , ஃபைன்ட் மீ விளக்கு போன்றவற்றை பெற்றிருக்கும்.

ஆரஞ்சு , வெள்ளை , கருப்பு மற்றும் சிவப்பு என நான்கு விதமான வண்ணங்களில் கிடைக்கும். இவற்றில் ஆரஞ்ச் மற்றும் வெள்ளை வண்ணங்களில் இரட்டை வண்ண கலவையில் கிடைக்கும்.

மஹிந்திரா கஸ்டோ 125 ஸ்கூட்டர் விலை

DX – ரூ.50,920

VX – ரூ. 54,920

( அனைத்தும் தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை )

[envira-gallery id="7103"]