Bike News

மஹிந்திரா சேஞ்சுரா 110 பைக் மைலேஜ் 79kmpl

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிய பைக்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.முந்தைய பதிவில் மஹிந்திரா பேன்டேரா   110 பற்றி பார்த்தோம்.

மஹிந்திரா பேன்டேரா   110 பைக்கின் அதே என்ஜின்தான் சேஞ்சுரா 110 பைக்கிற்க்கும் ஆனால் வடிவமைப்பில் சில மாற்றங்களை தந்துள்ளது. மேலும் கார்களில் உள்ளது போல கீ போப் ரீமோட் கன்ட்ரோல் உள்ளது. என்ஜின் இம்மொபைல்சர், எல்ஈடி லைட் போன்றவை  இருக்கும்.

மேலும் மஹிந்திரா சேஞ்சுரா 110(mahindra centuro 110) டேங்கின் அடிப்பகுதியில் சற்று ஸ்டைலான வளைவினை கொடுத்துள்ளது. என்ஜின் மற்றும் மைலேஜ் விவரங்கள்…

மஹிந்திரா பேன்டேரா   110 பைக்கினை தொடர்ந்து இந்த பைக் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 இதன் என்ஜின்  MCi-5, 110cc,சிங்கிள் சிலிண்டர் என்ஜின் ஆகும். சக்தி 8.6ps @ 7500rpm. 60km வேகத்தை 8.85 விநாடியில் நெருங்கும்.

மைலேஜ் 79.4kmpl(ARAI Certified)

Share
Published by
MR.Durai
Tags: Mahindra