மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான தார் ராக்ஸ் எஸ்யூவி காரில் 4×4 டிரைவ் மாடல்களில் புதிதாக மோச்சா பிரவுன் (Mocha Brown) என்ற நிறம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள வெள்ளை நிற இன்டீரியர் ஆனது அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கின்ற நிலையில் புதிய நிறம் டாப் தார் ராக்ஸ் மாடல்களில் மட்டுமே கிடைக்கும் அதுவும் தற்போது முன்பதிவு துவங்கப்பட்டு 2025 ஜனவரி மாதம் முதல் டெலிவரி வழங்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 3 ஆம் தேதி முன்பதிவு காலை 11 மணிக்கு துவங்குகின்ற நிலையில் அனைத்து வேரியண்டுகளுக்கான முன்பதிவு அன்றைக்கு நடைபெற உள்ளது இதில் ஏற்கனவே ஐவரி நிறம் அதாவது வெள்ளை நிறம் கொண்ட இன்டீரியர் மட்டும் டெலிவரி உடனடியாக வழங்கப்படும் என இந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூபாய் 21,000 வசூலிக்கப்படுகின்றது.
2.0-லிட்டர், 160bhp மற்றும் 330Nm வளரும் m-Stallion டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2-லிட்டர், mHawk டீசல் இன்ஜின் 153bhp மற்றும் 330Nm. ஆறு-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இதில் பதிப்புகள் 4×2 டிரைவ் மட்டும் கிடைக்கும்.
டாப் மாடல்களில் 2.0-லிட்டர், 177bhp மற்றும் 380Nm வளரும் m-Stallion டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2-லிட்டர், mHawk டீசல் இன்ஜின் 175bhp மற்றும் 370Nm. ஆறு-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இதில் பதிப்புகள் 4×4 டிரைவ் மட்டும் கிடைக்கும்.