Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் ரிட்டர்ன்ஸ்

by automobiletamilan
ஜூலை 10, 2016
in பைக் செய்திகள்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரபலமான ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் ரூ.80,552 விலையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிதாக தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 சந்தைக்கு மறுபிரவேசம் எடுத்துள்ளது.

honda-cb-unicorn-150

ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 பைக்கின் வருகையால் விலக்கி கொள்ளப்பட்ட யூனிகார்ன் 150 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்ததை தொடர்ந்து மீண்டும் 150சிசி சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை ஈடுகொடுக்கும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹோண்டா நிறுவனம் 150சிசி பிரிவுக்கு உட்பட்டதில் ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 மற்றும் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஆகிய பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது.

ஹோண்டா யூனிகார்ன் 150 இஞ்ஜின்

கருப்பு மற்றும் சிவப்பு என இரு வண்ணங்களில் மட்டும் வந்துள்ள 2016 யூனிகான் 150 பைக்கில் பிஎஸ் 4  மாசு உமிழ்வு என்ஜினுடன் 13.14 bhp ஆற்றலை வெளியிடும் 149.1சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 12.84Nm ஆகும். 5 வேக கியர்பாக்ஸ் உதவியுட்ன் ஆற்றலை சக்கரங்களுக்கு கடத்துகின்றது.

honda-cb-unicorn-150

கிக் மற்றும் செல்ஃப் என இருவிதமான ஸ்டார்ட்டிங் அமைப்பிலும் கிடைக்கின்ற யூனிகார்ன் 150 பைக்கில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. முன்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் மற்றும் பின்புற டயரில் 130மிமீ டிரம் பிரேக்கினை பெற்றுள்ளது.

2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 விலை ரூ. 80,552 ( ஆன்ரோடு சென்னை )

Tags: Honda Bike
Previous Post

டெஸ்லா எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக மஹிந்திரா எலக்ட்ரிக் கார்

Next Post

புதிய மஹிந்திரா டியூவி500 எம்பிவி சோதனை ஓட்டம் – இனோவா காருக்கு எதிராக

Next Post

புதிய மஹிந்திரா டியூவி500 எம்பிவி சோதனை ஓட்டம் - இனோவா காருக்கு எதிராக

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version