Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய டிவிஎஸ் ஜூபிடர் பிஎஸ் 4 விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
மார்ச் 14, 2017
in பைக் செய்திகள்

பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற புதிய டிவிஎஸ் ஜூபிடர் பிஎஸ் 4 ஸ்கூட்டர் ஏஹெச்ஓ வசதி மற்றும் சிங்க் பிரேக்கிங் சிஸ்டம் பெற்று ரூ. 53,342 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய டிவிஎஸ் ஜூபிடர்

  • பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிமுறைக்கு ஏற்ற என்ஜினை ஜூபிடர் ஸ்க்கட்டர் பெற்றுள்ளது.
  • ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியை மட்டுமே பெற்றுள்ளது.
  • பின்புற பிரேக்கினை பிடிக்கும் பொழுது தானியங்கி முறையில் முன்புற பிரேக்கும் பிடிக்கும் முறைக்கே சிங்க் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படுகின்றது.
  • புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விலை ரூ.49,666 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

109.7 சிசி கொண்ட ஒற்றை சிலிண்டருடன் செயல்படும் இந்த என்ஜின் ஆற்றல் அதிகபட்சமாக  109.7 8 bhp மற்றும் டார்க் 8 Nm ஆகும். ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

தேவை ஏற்படும்பொழுது பின்புற பிரேக்கினை இயக்கினால் தானியங்கி முறையில் முன்புற பிரேக்கும் பிடிக்கும் முறைக்கே சிங்க் பிரேக்கிங் சிஸ்டம் என அழைக்கப்படுகின்றது. இதுவரை ZX வேரியன்டில் மட்டுமே கிடைத்து வந்த நுட்பம் தற்பொழுது பேஸ் மாடலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் டெலஸ்கோபிக்  சஸ்பென்ஷனும்,பின்பக்கத்தில் கேஸ் சார்ஜுடு சஸ்பென்ஷனை பெற்றுள்ள புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் 130மிமீ முன் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர டாப் வேரியன்டில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

புதிதாக வந்துள்ள ஜூபிடர் மாடலில் கூடுதலாக ஜேட் க்ரீன் மற்றும் மிஸ்டிக் கோல்டு வண்ணங்களுடன் மொத்தம் 10 விதமான வண்ணங்களுடன் மெட்டல் பாடி கொண்ட ஜூபிடர் மாடலில் கூடுதலாக சிறப்பான மைலேஜ் தரும் வகையில் டிவிஎஸ் நிறுவனத்தின் காப்புரிமையை பெற்ற எக்னாமீட்டர் எனப்படும் நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஈகோ மற்றும் பவர் என இருவிதமான மோட்கள் இடம்பெற்றுள்ளன.

110சிசி சந்தையில் ஆக்டிவா 4ஜி மாடலுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜூபிடர் விற்பனை 15 லட்சம் ஸ்கூட்டர்களை எண்ணிக்கையை எட்டியுள்ளது என டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ஆக்டிவா மட்டுமல்லாமல் மேஸ்ட்ரோ எட்ஜ் , கஸ்ட்டோ போன்ற மாடல்களுக்கும் போட்டியாக ஜூபிடர் விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய டிவிஎஸ் ஜூபிடர் சென்னை விலை பட்டியல்

TVS Jupiter – ரூ. 53,342

TVS Jupiter ZX – ரூ. 55,350

TVS Jupiter ZX Disc – ரூ. 57,342

(எக்ஸ்ஷோரூம் சென்னை )

Tags: ஜூபிடர்
Previous Post

1000 bhp பவரை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த டாடா டி1 பிரைமா டிரக் அறிமுகம்

Next Post

வாகனங்களை பதிவு செய்ய ஆதார் அவசியம் – தமிழக போக்குவரத்துத் துறை

Next Post

வாகனங்களை பதிவு செய்ய ஆதார் அவசியம் - தமிழக போக்குவரத்துத் துறை

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version