மேம்படுத்தப்பட்ட 2017 பஜாஜ் பல்சர் 180 பைக் ரூ. 81,086 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் 180 பைக்கில் பிஎஸ்4 என்ஜின் மற்றும் தோற்ற மாற்றங்களை சிறிய அளவில் பெற்றுள்ளது.
2017 லேசர் எட்ஜ்டு டிசைன் நுட்பத்தை கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ள பல்சர் 180 பைக்கில் புதிய பாடி கிராபிக்ஸ் , மேம்படுத்தப்பட்ட இன்ஸ்டுரூமென்ட் கிளஸ்ட்டர் டிசைன் மற்றும் இருக்கையின் அமைப்பில் மேம்பாடு பெற்று நெடுந்தொலைவு பயணத்துக்கு ஏற்றதாக அமையும் , லேசர் எட்ஜ்டு கிராபிக்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.
2017 பஜாஜ் பல்சர் 180 என்ஜின்
முந்தைய 178.06சிசி என்ஜின பொருத்தப்பட்டிருந்தாலும் பிஎஸ்3 என்ஜினுக்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட புதிய பிஎஸ்4 தர என்ஜின் பெற்றுள்ளது. 17.02 ஹெச்பி பவர் மற்றும் 1 நியூட்டன்மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
முன்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்க டயரில் 230மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் நைட்ராக்ஸ் சாக் அப்சார்பரினை பெற்று விளங்குகின்றது.
2017 பஜாஜ் பல்சர் 180 பைக் விலை ரூ. 81,086 ஆகும். (விலை எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) முந்தைய மாடலை விட ரூ.3400 வரை பல்சர் 180 பைக் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க ; 2017 பஜாஜ் பல்சர் பைக்குகள் விலை விபரம்