பிஎம்டபிள்யூ R 1200 கார்களுக்கு மாற்றாக R 1250 GS வெளியானது. புதிய அட்வென்சர் பைக்கள் பெரிய இன்ஜின்களுடனும், 1245cc பாக்ஸர் இன்ஜின்களுடன் வெளியிட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பைக்கள் 136hp மற்றும் 7750rpm மற்றும் 143Nm டார்க்யூவை கொண்டுள்ளது. இது முந்திய மாடலை ஒப்பிடும் போது அதிக வேகமாகவே இருக்கும்.
பிஎம்டபிள்யூ நிறுவனம், ஷிப்ட்கேம் டெக்னாலஜிகளுடன் வெளியாகியுள்ளா 1250GS பைக்குகள், அடிப்படையாக வால்வ் டைமிங் தொழில்நுட்பங்களை கொண்டதாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் அதிகளவிலான ஆற்றலை வெளிபடுத்தும் வகையில் இருக்கும்.
இந்த பைக்கில், கேம்சாப்ட் டிரைவ்களுடன் டூத் செயின், ஆப்டிமைஸ்டு சப்ளை, டூவின் ஜெட் இன்ஜெக்சன் வால்வுகள் மற்றும் புதிய எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் புதிய 6.5 இன்ச் முழு கலர் TFT ஸ்கிரீன்களுடன் கூடிய இன்ஸ்டுரூமென்ட் கிளச்ரை, LED ஹெட்லேம்கள் மற்றும் LED DRLகள் பொருத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வசதிகளை பொறுத்தவரயில், ஆட்டோமேடிக் ஸ்டேபிலிட் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், ABS புரோ, எலெக்ட்ரிக் சஸ்பென்ஸன் டைனமிக் இத்துடன் முழுவதும் ஆட்டோமேட்டிக் வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த பைக்குகள் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.