FI என்ஜின் பெற்ற சுசுகி ஜிக்ஸர் SF 150 பைக்கினை ரூ.1.10 லட்சத்தில் விற்பனை செய்ய சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை விட ஸ்டைல் மற்றும் பாடி கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக ஜிக்ஸெர் எஸ்எஃப் வரிசை மாடலில் 250சிசி என்ஜின் பெற்ற புதிய பைக் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் ஸ்டைலிஷான ஃபேரிங் செய்யப்பட்ட பேனல்கள் ஸ்போர்ட்டிவ் தன்மையை தொடர்ந்து அதிகரிக்கின்றது.
14.1 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
விற்பனையில் உள்ள மாடலை விட ஃபேரிங் செய்யப்பட்ட பேனல்கள் மிக நேர்த்தியான முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பிளிட் செய்யப்பட்ட இருக்கைகள், கிளிப் ஆன் ஹேண்டில் பார், க்ரோம் பூச்சை பெற்ற சைலென்ஸர் பேரல் மற்றும் புதிய பாடி கிராபிக்ஸ் போன்றவை பெற்றுள்ளது.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது.
தொடர்ந்து சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக ஜிக்ஸர் SF 150 பைக் ரூ.1,09,870 (எக்ஸ்-ஷோரூம் சென்னை) விற்பனைக்கு வெளியிட உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…