ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ்6 மாசு விதிமுறைகளுக்கு ஏற்ப சுசுகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF மற்றும் ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய பிஎஸ்4 மாடலை விட 11 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
13.6 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் SF வரிசை பைக் என்ஜினில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 13.8 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. முன்பாக பிஎஸ்4 பதிப்பில் 14.1hp பவர் மற்றும் 14Nm வெளிப்படுத்தியது.
பிஎஸ் 6 மாடல்களை சுசுகி பின்வரும் நிறங்களில் தேர்வு செய்யலாம்:
சுசுகி ஜிக்ஸர் பிஎஸ் 6: ஸ்பிர்க்கிள் கருப்பு, கிளாஸ் கருப்பு மற்றும் சோனிக் வெள்ளி / ஸ்பிர்க்கிள் கருப்பு
சுசுகி ஜிக்ஸர் SF பிஎஸ் 6: கருப்பு மற்றும் சோனிக் வெள்ளி / ஸ்பிர்க்கிள் கருப்பு
சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி பிஎஸ் 6: மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ
Model | Price (எக்ஸ்ஷோரூம்) |
---|---|
GIXXER | INR 1,11,871 |
GIXXER SF | INR 1,21,871 |
GIXXER SF MotoGP | INR 1,22,900 |