Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியாவில் புதிய சுஸூகி இன்ட்ரூடர் விற்பனைக்கு அறிமுகம்

by automobiletamilan
April 5, 2019
in பைக் செய்திகள்

2019 Suzuki Intruder

க்ரூஸர் ரக சந்தையில் மிகவும் ஸ்டைலிஷான சுஸூகி இன்ட்ரூடர் பைக்கில் புதிய நிறம், புதுப்பிக்கப்பட்ட பிரேக் பெடல் மற்றும் கியர் ஷிஃப்ட் லிவர் மாற்றத்துடன் ரூ.1.08 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

இன்ட்ரூடர் பைக்கின் விற்பனை வந்த சில மாதங்களில் சரிவை சந்திக்க தொடங்கிய நிலையில், கடந்த ஜனவரி, பிப்ரவரி 2019 மாதங்களில் விற்பனை செய்யப்படாத நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட மாடல் வெளியாகியுள்ளது.

சுஸூகி இன்ட்ரூடர் பைக்கின் சிறப்புகள்

இந்த மாடலில் புராஜெக்டர் எல்.இ.டி முகப்பு விளக்கு ,எல்.இ.டி டெயில் விளக்கு பெற்றிருப்பதுடன் பிரிமியம் தோற்ற பொலிவினை கொண்டுள்ளது. 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்று 740 மிமீ இருக்கை உயரம் கொண்டுள்ள இந்த மாடல் பெரும்பாலான மக்களுக்கு ஏற்ற வகையிலும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கின்றது.

அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம் சுழற்சியில் 14.8 HP பவரையும் மற்றும் 6000 rpm சுழற்சியில் அதிகபட்சமாக 14 என்எம் டார்க்கினை வழங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. புதிய 2019 இன்ட்ரூடர் மாடலில் மெட்டாலிக் மேட் டைட்டானியம் சிலவர் நிறம்,  பிரேக் பெடல் அமைப்பில் மாற்றம் மற்றும் கியர் ஷிஃப்ட் லிவரில் சிறிய மாற்றத்தை தந்துள்ளது. ஒற்றை சேனல் ஏபிஎஸ் பிரேக்கினை நிரந்தரமாக இந்த பைக் பெற்றுள்ளது.

 

Tags: Suzuki Intruderஇன்ட்ரூடர் பைக்சுசூகி இன்ட்ரூடர்
Previous Post

35 ஆண்டுகால மாருதியின் ஆம்னி வேன் தயாரிப்பு நிறுத்தம்

Next Post

மாருதி செலிரியோ, செலிரியோ எக்ஸ் காரில் பாதுகாப்பு வசதி அறிமுகம்

Next Post

மாருதி செலிரியோ, செலிரியோ எக்ஸ் காரில் பாதுகாப்பு வசதி அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version