ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பிஎஸ்6 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் தீவரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மேம்பட்ட பேஷன் புரோ பைக் டீலருக்கு வந்துள்ள படங்கள் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.
விற்பனையில் கிடைக்கின்ற பேஷன் புரோ மாடலை விட முற்றிலும் மேம்பட்ட பல்வேறு அம்சங்களை கொண்டதாக படங்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக நவீனத்துவமான டிரென்டிற்கு ஏற்ப கலர் மற்றும் ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கட்ட ஹெட்லைட், டேங்க் டிசைன் மற்றும் பேனல்களும் கூட மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது.
முழுமையான பைக்கின் படம் தற்போது வெளியாகவில்லை. இருந்த போதும் விற்பனையில் உள்ள மாடலை விட சற்று மாறுபட்டது மட்டுமல்லாமல் கூடுதல் ஸ்டைல் மற்றும் புதிய நிறங்களுடன் வீல்பேஸ் வாகனத்தின் நீளம், உயரம் மற்றும் அகலம் கூடுதலாக பெறுவது உறுதியாகியுள்ளது.
பிஎஸ்6 என்ஜினை பொறுத்தவரை, சமீபத்தில் விற்பனைக்கு கிடைத்து வருகின்ற ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் மாடலில் இடம்பெற்றிருந்த அதே 110சிசி என்ஜினை பாஸ்ஷென் புரோ மாடலும் பெறக்கூடும். 113.2 சிசி என்ஜின் i3s உடன் புதிய Programmed FI என்ஜின் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 9.0 ஹெச்பி (6.73Kw) பவரை தொடர்ந்து 7500 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குகின்றது. இந்த மாடலின் டார்க் விபரம் 9.89 என்எம் ஆகும்.
சமீபத்தில் இந்நிறுவனம், ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக்கில் பிஎஸ்6 என்ஜினை பொருத்தி வெளியிட்டிருக்கின்றது. எனவே, அடுத்த சில வாரங்களில் 2020 ஹீரோ பேஷன் புரோ பைக்கும் வெளியாக உள்ளது.